தமிழகத்தில்,
லோக்சபா தேர்தல் முடிந்த பின், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி
துவங்கும்' என, தேர்வுத் துறை வட்டாரம், நேற்று தெரிவித்துள்ளது. 60 ஆயிரம்
ஆசிரியர்கள் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பத்து லட்சம் மாணவ,
மாணவியர், 10ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். ஒரு மாணவருக்கு, ஏழு
தேர்வுகள் வீதம், 70 லட்சம் விடைத்தாள்களை திருத்த வேண்டி உள்ளது.
தமிழகத்தில், 12
ஆயிரம் பள்ளிகளில் இருந்து, பாட வாரியாக, ஐந்து
ஆசிரியர்கள் வீதம், 60 ஆயிரம் ஆசிரியர்களை, விடைத்தாள் திருத்தும் பணியில்
ஈடுபடுத்த உள்ளோம். ஒரு ஆசிரியர், நாள் ஒன்றுக்கு, 30 விடைத்தாள்
திருத்துவார். அதன்படி, ஒரு நாளில், 18 லட்சம் விடைத்தாள்களை திருத்த
முடியும். அதிகபட்சமாக, ஐந்து நாளுக்குள், விடைத்தாள் திருத்தும் பணியை
முடிப்போம். தேர்தல் பணி பயிற்சி வகுப்பில், ஆசிரியர் பங்கேற்க இருப்பதால்,
தேர்தலுக்குப் பின், பணியை துவக்கி, ஏப்ரல் இறுதிக்குள் முடித்து
விடுவோம்.
இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய பாணி : வழக்கமாக, விடைத்தாள் திருத்தும் பணி, 15 அல்லது 20 நாள் என,
இழுவையாக நடக்கும். ஆனால், இந்த ஆண்டு, விடைத்தாள் திருத்தும் பணியை,
விரைந்து முடிக்க, அதிக ஆசிரியர்களை, விடைத்தாள் திருத்தும் பணியில்
ஈடுபடுத்தி, இயக்குனர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
இதனால், தேர்வு முடிவும், விரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளது. தேர்வு
மையங்களில் இருந்து, விடைத்தாள்களை திருத்தும் மையங்களுக்கு கொண்டு
செல்லும் பணியில், முன்னணி தனியார் பார்சல் நிறுவன வாகனங்களை, தேர்வுத்துறை
ஈடுபடுத்தி வருகிறது. "கடந்த ஆண்டு, இந்த பணிக்காக, 2.8 கோடி ரூபாயை,
அஞ்சல் துறைக்கு, தேர்வுத்துறை வழங்கியது. தற்போது, தனியார் நிறுவனங்கள்
பயன்படுத்தப்படுவதால், இந்த ஆண்டு செலவு குறையும்' என, தேர்வுத் துறை
தெரிவித்துள்ளது.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Friday 28 March 2014
Home
10TH 12TH EXAM NEWS
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி : தேர்தலுக்கு பின் துவங்கி 5 நாட்களில் முடிகிறது:
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி : தேர்தலுக்கு பின் துவங்கி 5 நாட்களில் முடிகிறது:
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...