அரசு விடுமுறை நாளில் தேர்தல் பயிற்சி நடத்தப்படுவதற்கு ஆசிரியர்கள் அதிருப்தி: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Saturday 29 March 2014

அரசு விடுமுறை நாளில் தேர்தல் பயிற்சி நடத்தப்படுவதற்கு ஆசிரியர்கள் அதிருப்தி:

அரசு விடுமுறை நாளில் தேர்தல் பயிற்சி நடத்தப்படுவதற்கு ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.மக்களவைத் தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 7,215 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவு பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதையொட்டி, வாக்குப்பதிவு பணிகள் தொடர்பாக அவர்களுக்கு 4 கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் மார்ச் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம், மாணிக்கம்பாளையம், குமாரபாளையம் என மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மார்ச் 31-ஆம் தேதி அரசு விடுமுறை நாள் (தெலுங்கு புத்தாண்டு) என்பதால், அன்றைய தினம் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு ஆசிரியர் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாவட்டத் தலைவர் செ.மலர்கண்ணன் கூறியது:
ஒவ்வொரு ஆண்டும் பணியாளர்களுக்கு கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டிய நாள்கள் குறித்து அரசே வகுத்தளித்துள்ளது. இதில், தெலுங்கு புத்தாண்டும் ஒன்றாகும். இதைக் கருத்தில் கொண்டே தேர்தல் ஆணையமே வேட்புமனு தாக்கலை திங்கள்கிழமை நடத்தாமல் விடுமுறை அளித்துள்ளது.
ஆனால், அரசு விடுமுறை நாளை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளே கண்டுகொள்ளாமல் அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவது வருத்தத்துக்குரியது. எனவே, அரசு விடுமுறை நாளில் தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்துவதைக் கைவிட்டு வேறொரு நாளில் நடத்த ஆசிரியர்கள் எதிர்நோக்கி உள்ளனர் என்றார் அவர். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.தட்சிணாமூர்த்தி கூறியது: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால், மற்ற நாள்களில் தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்தினால் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களால் பயிற்சிக்கு வர முடியாது. தவிர, அந்த ஆசிரியர்களுக்கு தனியாக பயிற்சி அளிப்பதும் இயலாது. மேலும், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் பயிற்சி என்பதால் காலம் தாழ்த்தாமல் நடத்த வேண்டியதும் அவசியமாகும். இவற்றைக் கருத்தில் கொண்டுதான் மார்ச் 31-ஆம் தேதி பயிற்சி வகுப்பை நடத்த திட்டமிடப்பட்டது. ஆசிரியர்களும் தாங்கள் ஈடுபடும் பணியின் முக்கியத்துவம் கருதி தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H