பத்தாம் வகுப்பிற்கு, வரும் கல்வி ஆண்டில், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படாது. தற்போது உள்ள நடைமுறையே, வரும் ஆண்டிலும் தொடரும்" என்று கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
தற்போது, 9ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை, அமலில் உள்ளது. ஒவ்வொரு வகுப்பிற்கான பாடத் திட்டமும், மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, பாடம் நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வுக்கு, 60 மதிப்பெண், மாணவர்களின் செயல்திறன் நடவடிக்கைகளுக்கு, 40 மதிப்பெண் என பிரித்து, தேர்வு நடத்தப்படுகிறது. இத்திட்டம், வரும் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பிற்கும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதுதொடர்பான கோப்பு முதல்வர் அலுவலகத்திற்கு சென்று, பல மாதங்கள் கரைந்த நிலையில், இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையே, புதிய கல்வி ஆண்டு துவங்குவதற்கு இன்னும், இரண்டு மாதமே உள்ளது. ஜூன் முதல் வாரம், 2014-15 கல்வி ஆண்டு துவங்குகிறது. இரு மாதத்திற்குள், முப்பருவ கல்வி முறைக்கு ஏற்ப பாடத்திட்டங்களை உருவாக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, வரும் கல்வி ஆண்டிலும், தற்போதுள்ள முறையை, தொடர்ந்து கடைபிடிக்க, அரசு முடிவெடுத்து உள்ளதாக, கல்வித்துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது. இதற்கு ஏதுவாக, பழைய பாட புத்தகங்களை அச்சடிக்க, பாடநூல் கழகத்திற்கு, அனுமதி வழங்கப் பட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.