Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
சென்னை மாவட்ட அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு மார்ச்'14 ஊதியம் விரைவில் பெற்று தர வழிவகுத்த த.ஆ.கூ பொதுச்செயலாளர் செ.முத்துசாமி அவர்களுக்கும், இயக்குநரின் துரித நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் பாராட்டு
சென்னை மாவட்ட அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு மார்ச்'14 ஊதியம் விரைவில் பெற்று தர வழிவகுத்த த.ஆ.கூ பொதுச்செயலாளர் செ.முத்துசாமி அவர்களுக்கும், இயக்குநரின் துரித நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் பாராட்டு
சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு நிதி உதவி
பள்ளிகளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து
2014-2015 நிதி ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு வழங்காததால் மார்ச் மாத ஊதியம்
கருவூலத்தில் சமர்பிக்க முடியாமல், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள்
பாதிப்புக்குள்ளாயினர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்ட
போது, தொடக்க கல்வி இயக்குனரகம் மூலம் மாவட்ட வாரியக நிதி ஒதுக்காததால்
தங்களால் ஆணை ஏதும் வழங்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைமை நிலைய செயலாளர் திரு.க.சாந்தகுமார்,
சார்ந்த சங்க பொதுச் செயலாளர் திருமிகு. செ.முத்துசாமி அவர்களின்
கவனத்திற்கு இப்பிரச்சனையை 02.03.2014 மதியம் 01.00 மணியளவில் எடுத்து
சென்றார். உடனே பொதுச்செயலாளர் அவர்கள் நமது தொடக்க கல்வி இயக்குநர்
முனைவர். இளங்கோவன் அவர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இப்பிரச்சனை
சார்பு முறையிட்டார்.
தொடக்க கல்வி இயக்குநர் அவர்கள் உடனே மாவட்ட
நிர்வாகத்தை அழைத்து பேசி, உடனே நிதி ஓதுக்கீடு வழங்கும் பணியை இயக்குனரகம்
மூலம் முடுக்கி விட்டு மாலை 04.00 மணியளவில் சென்னை மாவட்ட
நிர்வாகத்தினருக்கு நிதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.. பின்பு மாலை 06.00
மணிக்குள் சென்னை மாவட்டத்தில் உள்ள பத்து ஓன்றியங்களுக்கும் நிதி
ஒதுக்கீடு ஆணை மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்பட்டது.. தொடக்க கல்வி
இயக்குனரகத்தில் இருத்து பொதுச் செயலாளர் திருமிகு. செ.முத்துசாமி அவர்களை
தொலைப்பேசியில் அழைத்து அனைத்து ஆசிரியர்களும் ஊதியம் பெற எடுக்கபட்ட
நடவடிக்கையின் விபரத்தை தெரிவித்தனர். இயக்குநரின் துரித நடவடிக்கைக்கு
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திருமிகு.செ.முத்துசாமி
தமது நன்றியினை தெரிவித்தார்.
ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனையை களைய
முனைப்புடன் செயலாற்றிய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர்
திருமிகு.செ.முத்துசாமி மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் முனைவர்.இளங்கோவன்
அவர்களுக்கு சங்க வேறுபாடின்றி சென்னை மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்
பெருமக்கள் தமது நன்றியினை தெரிவித்தனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








