பத்தாம் வகுப்பு மாணவர்கள், ஒவ்வொரு தேர்வையும், 15 பக்கங்களில் எழுதி முடித்து விடுவதால், ஒவ்வொரு தேர்விலும், 1.5 கோடி பக்க விடைத்தாள் வீணாகி வருகிறது. இதை கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு மொத்த பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு,
30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, 40
பக்கங்கள் கொண்ட விடைத்தாள் கட்டும், முதல் முறையாக இந்த ஆண்டு
வழங்கப்பட்டது; அனைத்து பக்கங்களும் தைத்து வழங்கப்பட்டன. இந்த புதிய
முறையால், கூடுதல் விடைத்தாள் வாங்குவது, பெரிதும் குறைந்துள்ளது. கூடுதல்
விடைத்தாள் வாங்கும் போது, பதிவு எண் எழுதுதல், கையெழுத்து போடுதல்
போன்றவற்றால், மாணவர்கள் நேரம் மிச்சப்படுத்தப்படுவதோடு, பாதுகாப்புடன்,
விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு செல்வது உறுதி செய்யப்பட்டது.
இப்புதிய முறையில் வரவேற்கதக்க அம்சங்கள் இருந்தாலும், விடைத்தாள்கள்
முழுவதையும், மாணவர்கள் பயன்படுத்தவில்லை என்பது, தற்போது தெரிய
வந்துள்ளது. குறிப்பாக, 10ம் வகுப்பு மாணவர்கள், ஒவ்வொரு தேர்வையும், 15
முதல், அதிகபட்சமாக, 17 பக்கங்களுக்குள் எழுதி முடித்துள்ளனர். இதனால்,
10.5 லட்சம் மாணவர்களால், ஒவ்வொரு நாளும், 1.5 கோடி பக்க விடைத்தாள் வீணாகி
வருகிறது.
அறிவியல் தேர்வு, 75 மதிப்பெண்ணுக்குத் தான் நடத்தப்படுகிறது. 25
மதிப்பெண்ணுக்கான செய்முறை தேர்வு, ஏற்கனவே பள்ளிகளில் நடந்து விடுகிறது.
ஆனால், எழுத்து தேர்வுக்கும், அதே, 30 பக்கம் கொண்ட விடைத்தாள்
வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: பக்கம் பக்கமாக எழுதினால்,
அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற எண்ணம், ஒரு காலத்தில் தேர்வர்களிடையே
இருந்தது. இதனால் 40, 50 பக்கம் என எதையாவது கிறுக்குவர். ஆனால், இப்போது
கேள்விக்கு தகுந்தபடி, தேவையான அளவில் மட்டுமே, மாணவர்கள் விடை
அளிக்கின்றனர். &'பாயின்ட்&' அடிப்படையில் பார்த்து,
விடைத்தாளுக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது. எனவே, &'வள வள&' என,
விடை எழுதுவதை, மாணவர்களே விரும்புவதில்லை.
மேலும், அனைத்து தேர்வுகளிலும், ஒரு மதிப்பெண் பகுதி உள்ளது. இதற்கு,
&'ஏ, பி, சி&' என, ஏதாவது ஒரு எழுத்தை குறித்தாலே போதும். இதற்கு
அதிக பக்கம் தேவைப்படாது. ஒவ்வொரு தேர்விலும், 75 லட்சம் தாள்கள் (சிங்கிள்
ஷீட்), 1.5 கோடி பக்கங்கள் வீணடிக்கப்படுகின்றன; இதனால், பல லட்சம் ரூபாய்
விரயம் ஏற்படுகிறது. இவ்வாறு, அந்த ஆசிரியர் தெரிவித்தார்.
மாணவர்கள், அதிகளவில் விடைத்தாள்களை வீணடிப்பதை, தேர்வுத்துறையும்
கவனித்துள்ளது. எனவே, அடுத்த ஆண்டு, பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம்
என, எதிர்பார்க்கப்படுகிறது.