பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நாடு முழுவதும் சுமார்
2.5 லட்சம் ஊழியர்கள், பணியாளர்கள், அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இவர்களை
தவிர சுமார் 5109 தற்காலிகம் எனப்படும் சிஎல் பணியாளர்கள்
பணியாற்றுகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று
தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.
பிஎஸ்என்எல்
நிறுவனத்தில் 1984ம் ஆண்டுக்கு பிறகு நான்காம் நிலை ஊழியர்கள், கடை நிலை
ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில்லை என்பதால் இவர்களின் கோரிக்கை களை
பிஎஸ்என்எல் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட
வழக்கில் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனால்
ஒவ்வொரு தொலைத் தொடர்பு வட்டத்திலும் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களின்
பட்டியலை ஏப்.21ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பிஎஸ்என்எல் நிர்வாகம்
கடிதம் அனுப்பியுள்ளது. தற்காலிக பணியாளர்பட்டியலை அந்தந்த தொலைத் தொடர்பு
வட்டத்தின் பொதுமேலாளர்(நிர்வாகம்) மூலமாக தயாரித்து தலைமை பொது மேலாளர்
அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிர்வாகம்
பட்டியலை கேட்டுள்ளதால் விரைவில் பணி நிரந்தர அறிவிப்பு வரும் என்று தற்
காலிக பணியாளர்கள் காத்திருக்கின்றனர். முன்தேதியிட்டு பணி நிரந்தரம்
செய்யப் படும் என்றும் பிஎஸ்என் எல் அதிகாரிகள் தெரிவித்தனர்.