மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் அங்கீகாரம் பெறாத போலி
கல்லூரிகளில் சேர்ந்து ஏமாற வேண்டாம்; பெற்றோர் விழிப்போடு இருக்க
வேண்டும்" என தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு
முடிவுகள், மே 9ல் வெளியாக உள்ளது. இந்த முடிவுகள் வரும் முன்பே "தன்
பிள்ளை எப்படியும் டாக்டராகி விட வேண்டும்" என்ற கனவுகளைச் சுமந்து கொண்டு
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடம் கேட்டு பெற்றோர்
பணத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு அலைகின்றனர். இதைப் பயன்படுத்தி தனியார்
கல்லூரிகளில் இஷ்டம்போல் 75 லட்சம் ரூபாய் வரை விலை பேசப்படுகிறது.
கல்லூரி முறையான அங்கீகாரம் பெற்றுள்ளதா? எனக்கூட சரியாக கவனிக்காமல்
"இடம் கிடைத்தால் போதும்" என போலி கல்லூரிகளில் இடம்பெற்று, பின்
பெற்றோரும், மாணவரும் திண்டாடும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதற்கு
திருவள்ளூர் டி.டி. மருத்துவக் கல்லூரி சரியான உதாரணம்.
இந்த கல்லூரியில் 2010 -11க்கு மட்டுமே இந்திய மருத்துவ கவுன்சில்
அனுமதி அளித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த
நிலையில், கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து மாணவர்களை சேர்த்தது. கல்லூரி
மூடப்பட்ட நிலையில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி கோர்ட்டுக்கு
அலைகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை பதிவாளர் ஜான்சி
சார்லஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மருத்துவம், பல் மருத்துவம்,
இந்திய மருத்துவம் மற்றும் அதன் சார்புடைய படிப்புகளில் சேரும்போது
மாணவரும், பெற்றோரும் விழிப்புடன் இருக்க வேண்டும். 2014-15ம் ஆண்டுக்கு
முறையான அனுமதி பெற்றுள்ள கல்லூரிகளின் விவரப் பட்டியல் மத்திய கவுன்சில்
மற்றும் பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அங்கீகாரம் இல்லாத கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்தால் அதற்கு பல்கலை
பொறுப்பல்ல. அங்கீகரிக்கப்படாத கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் பல்கலை
நடத்தும் தேர்வுகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...