Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
10TH 12TH EXAM NEWS
12TH RESULTS 2014
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியீடு: மறு கூட்டலுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்:
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியீடு: மறு கூட்டலுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்:
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. முடிவை இணையதளத்திலும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும், படித்த பள்ளிகளிலும் பார்க்கலாம்.இன்று வெளியீடுபிளஸ்-2 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ&மாணவிகள் எழுதினார்கள்.அந்த தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் வெளியிடப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் இணையதளம் வழியாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் அவர்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.தனித்தேர்வர்களுக்கு இன்றே சான்றிதழ் தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் இன்றே (வெள்ளிக்கிழமை) மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்றே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வுமுடிவுகள் இணையதளத்தில்வெளியிடப்படவில்லை.என வே , தனித்தேர்வர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று முதல் 14&ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம்.மாணவர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு, அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். எனவே, விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 5 நாட்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் எவ்வித அவசரமுமின்றி விண்ணப்பிக்கலாம்.தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 12&ந்தேதி முதல் 16&ந்தேதி வரை தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தாங்கள் தேர்வெழுத விரும்பும் பாடங்களுக்கு உரிய தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது. தேர்வுகளை சிறப்பாக நடத்தி, உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு தேர்வுத்துறை நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.மேற்கண்ட தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.
Tags
# 10TH 12TH EXAM NEWS
# 12TH RESULTS 2014
12TH RESULTS 2014
Labels:
10TH 12TH EXAM NEWS,
12TH RESULTS 2014
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








