புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜூலை 11ம் தேதி அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பால்பாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு
அரசு பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் பெற்றது.
கூட்டத்தில், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க
வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை
மீண்டும் அமல்படுத்த வேண்டும். வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த
வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, வெளி ஆதார பணியாளர்களை
பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை, திருச்சி,
கோவை, தர்மபுரி, கடலூர், தஞ்சை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில்
உண்ணாவிரத போராட் டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.







