டி.என்.பி.எஸ்.சி. நடத்திய அரசு துறை சார்ந்த
தேர்வில், பாஸ் ஆனவர்கள், பெயில் என்று கெசட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், தேர்வு எழுதிய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு, பதவி உயர்வு
கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசின் பல்வேறு துறைகளில்
பணியாற்றும் ஊழியர்களுக்காக துறை சார்ந்த தேர்வுகளை நடத்துகிறது. கடந்த
டிசம்பர் 13ம் தேதி �லோக்கல் பண்ட் ஆடிட்டிங் டிபார்மெண்ட்� தேர்வை
நடத்தியது. தமிழகம் முழுவதும் இத்தேர்வை சுமார் 5,000 அரசு ஊழியர்கள்
எழுதினர். இதற்கான ரிசல்ட் கடந்த கடந்த மார்ச் 14ம் தேதி வெளியிடப்பட்டது.
இதில்
சுமார் 2000 அரசு ஊழியர்கள் தேர்ச்சி பெற்றதாக, அவர்களின் தேர்வு எண்கள்
இணைய ளத்தில் வெளியிடப்பட்டன. அதன் பிறகு புல்லட்டின் (கெசட்) வெளியிடும்
போது தேர்ச்சி பெற்றவர்கள், மாவட்டங்கள் வாரியாக பெயர் பட்டியல்
வெளியிடப்பட்டது. அதில், புல்லட்டின் தலைப்பில் பாஸ் ஆனவர்கள் என்பதற்கு,
பதிலாக தவறுதலாக �பெயில்� ஆனவர்கள் என்ற தலைப்பில் பாஸ் ஆனவர்கள் பெயர்கள்
போடப்பட்டிருந்தது.
இதை பார்த்து தேர்ச்சி
பெற்ற அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இது சம்பந்தமாக
டிஎன்பிஎஸ்சியிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்
அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து தேர்வு எழுதிய அரசு ஊழியர்கள் கூறியதாவது:
துறை
தேர்வுக்கான ரிசல்ட்டில் பாஸ் ஆனவர்கள் எண்கள் முதலில் வெளியிடப்பட்டது.
அதன் பின்னர், புல்லட்டின்னில் தேர்ச்சி பெற்றவர்களை, பெயில் ஆனவர்கள்
என்று தலைப்பில் வெளியிட்டு அவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதாதவர்கள், பெயில் ஆனவர்கள் பெயர்கள் கடைசியில் தான் பதிவு
செய்யப்படும். ஆனால், புல்லட்டின் முதல் பக்கத்திலேயே தேர்ச்சி பெற்றவர்கள்
என்று பதிவு செய்வதற்கு பதிலாக, பெயில் ஆனவர்கள் என்று பதிவு
செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தவறுதலாக வெளியிட்டுள்ளதால் எங்களுக்கு
நியாயமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவைகள் எதுவும்
கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பள உயர்வு கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவிப்பு

நாங்கள்
பணியாற்றும் சம்பந்தப்பட்ட துறையிடம் தெரிவித்தால் புல்லட்டினை மாற்றி
கொண்டு வாருங்கள் அப்போது தான் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
புல்லட்டினை மாற்றாத வரை எந்த சலுகையையும் எங்களால் வழங்க முடியாது என்று
தெரிவித்து விட்டனர்.
இது குறித்து
டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். ஆனால்,
அவர்கள் அதை ஒரு பேப்பரில் எழுத்து பூர்வமாக எழுதி அனுப்புங்கள் என்று
கூறிவிட்டனர். டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவித்தவாறு எழுத்து பூர்வமாக
அனுப்பினோம். ஆனால், இன்று வரை தவறை திருத்துவதற்கான எந்த நடவடிக்கையையும்
எடுக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.