Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
புதுச்சேரி-கவுன்சலிங் 20ம் தேதி தொடங்கும் சென்டாக் தரவரிசை பட்டியல்:
சென்டாக் தரவரிசைப் பட்டியலை முதல்வர் ரங்கசாமி
அவரது அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார். 20ம்தேதி கவுன்சலிங் தொடங்கும் என
தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
2014ம்
ஆண்டிற்கான சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு 7,571 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் உயிரியல் சார்ந்த படிப்புக்கு 3885 மாணவர்களும், பொறியியல் சார்ந்த
படிப்புகளுக்கு 5228 மாணவர்களும், பி.பார்ம் படிப்பிற்கு 1799 மாணவர்களும்
விண்ணப்பித்துள்ளனர். தற்போது தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உயிரியல்
சார்ந்த படிப்பில் மாகே மாணவன் அமல் வின்சென்ட் முதலிடத்தையும்,
புதுச்சேரியை சேர்ந்த ஆனந்தவேல் இரண்டாவது இடத்தையும், முத்தரையர்பாளையத்தை
சேர்ந்த பசுபதிராஜ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். பொறியி யல்
படிப்பில் லாஸ் பேட்டை குமரன் நகரை சேர்ந்த பிரியங்கா முதலிடத்தையும்,
புதுவை நவ சக்தி நகரை சேர்ந்த பாரத் இரண்டாம் இடத்தையும், ராஜாஜி
நகரைசேர்ந்த லட்சுமி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
பி.பார்ம்
படிப்பில் புதுவை வடமங்கலத்தை சேர்ந்த கவுசல்யா முதலிடமும், இளங்கோ நகர்
சாருமதி இரண்டாம் இடமும், வில்லியனூர் உருவையாறு பகுதியை சேர்ந்த பூங்குழலி
மூன்றாமிடத்தைம் பெற்றுள்ளனர். சென்டாக் கவுன்சலிங் வருகிற 20ம்தேதி தொடங்
கும்.
புதுவை அரசு மருத்துவ கல்லூரிக்கு
அனுமதி பெறுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக டில்லி
சென்றபோது மத்திய சுகாதாரத்துறை கூடுதல் மற்றும் இணை செயலர்களை சந்தித்து
பேசினேன். அரசு மருத்துவக்கல்லூரியில் பேராசிரியர், துணை பேராசிரியர்
குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாக அகில இந்திய மருத்துவ கவுன்சில்
சுட்டிக்காட்டியது. இதையடுத்து அசோசியேட் புரபசர், அசிஸ்டெண்ட் புரொபசர்
பணியிடங்களில் 33 பணியிடங்களை தற்போது நிரப்பியுள்ளோம். இதுபற்றிய மருத்துவ
கவுன்சிலுக்கு தகவல் அனுப்பி உள்ளோம்.
மேலும்
சுகாதாரத்துறை செயலர் நாளை (இன்று) டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை
செயலரை சந்தித்து பேச உள்ளார். எனவே அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்
சேர்க்கைக்கு நிச்சயம் அனுமதி கிடைக்கும். அரசு மருத்துவகல்லூரிக்கும்
சேர்த்து தான் சென்டாக் கவுன்ச லிங் நடக்கும். மேலும் அரசு
மருத்துவக்கல்லூரியில் பொதுப்பிரிவு மருத்துவ அலுவலர் உள்பட பல உயர்பதவிகளை
நிரப்பவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இட
ஒதுக்கீடு பேச்சுவார்த்தையில் பிம்ஸ் மருத்துவக்கல்லூரி பங்கேற்கவில்லை.
அரசு இடஒதுக்கீட் டில் மாணவர் சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,
தாங்கள் மைனாரிட்டி நிறுவனம் என்று குறிப்பிட்டு அக்கல்லூரி
நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. எனினும் அவர்களிடமும் உரிய பேச்சுவார்த்தை
நடத்தி அரசு இடஒதுக்கீடு பெற முயற்சி எடுப்போம். அக்கல்லூரிக்கும் சேர்த்து
தான் கவுன்சலிங் நடை பெறும். தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு
ஒதுக்கீடான 265 சீட்டு களையும் முழுமையாக நிரப்ப நடவடிக்கை எடுப் போம்.
மேலும் தனியார் மருத்துவகல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீத இடங்களை பெற
அரசு பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர்
கூறினார்.
கட்டாய கல்வி உரிமை குறித்து முதல்வரிடம் கேட்டதற்கு �புதுவையில் தற்போது நல்ல கல்விதானே கொடுத்து வருகிறோம்� என்றார்.
பேட்டியின்போது கல்வித்துறை செயலர் ராகேஷ் சந்திரா உடனிருந்தார்.
முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்
சென்டாக் தரவரிசை பட்டியலை முதல்வர் ரங்கசாமி வெளியிட கல்வித்துறை செயலர் ராகேஷ்சந்திரா பெற்றுக்கொண்டார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








