திருச்சி, பாரதிதாசன் பல்லைக்கழகத்தில் எம்.எஸ்சி பயோ-டெக்னாலஜி படிப்பில் சேர நுழைவுத்தேர்வு ஜூன் 4ம் தேதி நடத்தப்படுகிறது.பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் பயோடெக்னாலஜி அன்ட் ஜெனிடிக் இன்ஜினியரிங் துறையில், காலை 11 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடத்தப்படுகிறது.
50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். தவறான மதிப்பெண்களுக்கு (நெகடிவ் மதிப்பெண்) குறைக்கப்படும்.
நுழைவுத்தேர்வு மற்றும் இளங்கலையில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.
கூடுதல் தகவல்கள் அறிய www.bdu.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.







