மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது முதல் நாளில் விளையாட்டு, மாற்றுத் திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது முதல் நாளில் விளையாட்டு, மாற்றுத் திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர்:

மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாள் கலந்தாய்வில் விளையாட்டுத்துறை மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். எம்.பி.பி.எஸ்.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவபடிப்பில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த படிப்பில் சேர மொத்தம் 28 ஆயிரத்து 53 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 368 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தம் 27 ஆயிரத்து 539 விண்ணப்பங்கள் தகுதி உடையதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. கடந்த 14-ந்தேதி இந்த மாணவர் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 132 மாணவர்கள் 200-க்கு 200 ‘கட்ஆப் மார்க்’ எடுத்திருந்தனர். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வுஇந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில், விளையாட்டுத்துறை மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், ராணுவ வீரர்களின் பிள்ளைகள் போன்ற சிறப்பு பிரிவினருக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நேற்று நடந்தது.இதில் மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி, மருத்துவக்கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.காலை ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ராணுவவீரர்களின் பிள்ளைகளுக்கு 2 எம்.பி.பி.எஸ். இடங்களும், ஒரு பி.டி.எஸ். இடமும் ஒதுக்கப்பட்டு இருந்தன. இந்த இடங்களுக்கு 62 பேர் விண்ணப்பித்திருந்தனர்.ராணுவ வீரர்களின் பிள்ளைகள்இதில் 28 பேர் நேற்று அழைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் எஸ்.பாவ்யா, எம்.வி.பிரவீன் ஆகிய இருவருக்கு ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான 2 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்பட்டன. எஸ்.பாவ்யா சென்னை மருத்துவகல்லூரியையும், எம்.வி.பிரவீன் மதுரை மருத்துவகல்லூரியையும் தேர்ந்து எடுத்தனர். மீதமுள்ள ஒரு பி.டி.எஸ். இடத்துக்கு யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அந்த காலி இடத்துக்காக அடுத்த பிரிவில் காத்திருக்கும் மாணவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரிக்க இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.விளையாட்டு பிரிவு மாணவர்கள்இதைத்தொடர்ந்து விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு மொத்தம் 3 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இந்த இடங்களுக்கு 305 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களது விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் 6 மாணவர்களை தேர்வு செய்து அனுப்பினர். அந்த மாணவர்களுக்கு செல்போன் அழைப்பிலும், குறுஞ்செய்தி மூலமாகவும் தகவல் அனுப்பப்பட்டது. இந்த 6 மாணவர்களில் பெரில் ஹட்சன், ஆர்.கே.யுக்தி ரோஷினி, ஜெ.நிஷ்வின் ஆகிய 3 மாணவர்களுக்கு விளையாட்டுத்துறை மாணவர்களுக்கான 3 இடங்களும் ஒதுக்கப்பட்டன். இதில் பெரில் ஹட்சன் சென்னை மருத்துவக்கல்லூரியையும், ஆர்.கே.யுக்தி ரோஷினி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியையும், ஜெ.நிஷ்வின் சேலம் மருத்துவக்கல்லூரியையும் தேர்ந்தெடுத்தனர்.மாற்றுத்திறனாளிகள்அதன்பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மொத்தம் 65 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இதற்கு மொத்தம் 80 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் 77 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.முதலில் இவர்களுக்கு மாற்றுத்திறனாளி தேர்வு நடந்தது. அதனையடுத்து, டாக்டர்கள் குழு வழங்கும் மாற்றுத்திறனாளி சதவீதத்தையும், பிளஸ்-2 தேர்வில் எடுத்த மதிப்பெண் சதவீதத்தையும் வைத்து தரவரிசைப்பட்டியல் தயார்செய்யப்பட்டது. மொத்தம் 77 பேர் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளி கலந்தாய்வில் 39 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 38 பேர் நிராகரிக்கப்பட்டனர். இதற்கான காரணம் குறித்து ஒரு அதிகாரியிடம் கேட்டபோது, ‘மாற்றுத்திறனாளிகள் என்பது 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு உடலின் மேல் பகுதி சரியாக இயங்க வேண்டும். அதைவைத்து அவர்களுக்கு மாற்றுத்திறனாளி சதவீதம் வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருசிலர் விருப்பம் தெரிவிக்காமலும் செல்ல வாய்ப்புண்டு. அந்த காலியிடங்களும், மீதமுள்ள 26 காலியிடங்களும் பொது கலந்தாய்வில் சேர்க்கப்படும்’ என்றார்.தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்...தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களின் பெயர் விவரம் வருமாறு:-1. எம்.அருள்மணி, (விஜய்வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தர்மபுரி).2. எஸ்.ஸ்ருதி, (சேதுபாஸ்கர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்).3. எஸ்.திருமலை, (விஜய்வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி).இதுகுறித்து பின்னர், எம்.அருள்மணி நிருபர்களிடம் கூறியதாவது:-எனக்கு சிறுவயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது தற்போது நிறைவேறி உள்ளது. நான் 10-ம் வகுப்பு படித்த போது, ஒரு விபத்தில் எனது கால் பாதிக்கப்பட்டது. நான் சென்னை மருத்துவகல்லூரியை தேர்ந்தெடுத்துள்ளேன். நான் மருத்துவப்படிப்பில் எலும்பு முறிவு சிகிச்சைதுறையில் மருத்துவ நிபுணராக விரும்புகிறேன். என்னைப் போல் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவி செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.அடிப்படை வசதி இல்லைபொது கலந்தாய்வில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சாய்வு தளம் அமைக்கப்படாததால் மாணவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து கலந்துகொண்ட மாணவி ஹரிஸ்ரீ கூறும்போது, ‘மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு என்றால் அவர்களுக்கு குறிப்பிட்ட சில வசதிகள் செய்து தரப்பட வேண்டும். ஆனால் அடிப்படை வசதியான சாய்வு தளத்தை கூட நிர்வாகம் அமைக்கவில்லை. நான் இங்கு அமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுகளில் சுமார் 5 நிமிடத்துக்கு மேலாக இறங்குவதற்கும், ஏறுவதற்கும் சிரமப்பட்டுள்ளேன்’ என்றார். எம்.பி.பி.எஸ். படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. முதல் நாளில் 600 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்கிறார்கள்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H