Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
PHILOSOPHERS
உலகின் சாதனைப் பெண் “அன்னை தெரசா” பிறந்த தினம் இன்று - இவர் ஒரு உயர்நிலைப்பள்ளி ஆசிரியையாக வாழ்கையை தொடங்கியவர்:
உலகின் சாதனைப் பெண் “அன்னை தெரசா” பிறந்த தினம் இன்று - இவர் ஒரு உயர்நிலைப்பள்ளி ஆசிரியையாக வாழ்கையை தொடங்கியவர்:
நீலநிறக் கரைபோட்ட வெள்ளைக் கைத்தறிச் சேலை. சுருக்கங்கள் நிறைந்த முகம். கருணை பொங்கும் விழிகள். இன,
மத, பிரதேச வேறுபாடற்ற சேவை மனப்பாங்கு. இவற்றின் மொத்த உருவமாகத்
திகழ்ந்த அன்னை தெரசா ‘உலகின் சாதனைப் பெண்‘களில் இன்று இடம்பெறுகின்றார்.
1910 ஆகஸ்ட் 26
மெஸிடோனியாவில் பிறந்த அல்பேனிய இனத்தவரான இவரது இயற்பெயர் அக்னஸ் கொன்ஸா
பொஜாக்கியூ (Agnes Gonxha Bojaxhiu) என்பதாகும். அல்பேனிய மொழியில் Gonxha
என்பதன் பொருள் ரோசா மொட்டு அல்லது சின்னஞ்சிறு மலர் என்பதாகும்.
சிறுவயது முதல்
ஆழ்ந்த இறைப்பக்தியும் பொதுத் தொண்டில் மிகுந்த ஆர்வமும் கொண்ட இவர், தனது
18 ஆவது வயதில் ஐரிஷ் கன்னிகாஸ்திரிகளைக் கொண்ட லொரேட்டா கத்தோலிக்க
கன்னிகா மடத்தின் உறுப்பினரானார். கல்கத்தாவில் இந்திய மிஷனரிகள்
செய்துவந்த சமூகத் தொண்டுகளின் பால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எனவே,
டுப்ளினில் சில மாதங்கள் பயிற்சி பெற்றபின் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.
அதன்பின் ஆன்மீகக் கற்கையைத் தொடருமுகமாக அயர்லாந்து சென்றார். 1931 ஆம்
ஆண்டு ஞானஸ்நானம் பெற்று அன்னை தெரசாவானார்.
அன்னை தெரசா
1931-1948 ஆண்டுவரை கல்கத்தா புனித மேரி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியப்
பணியைத் தொடங்கினார். 1948 ஆம் ஆண்டு பாட்னாவில் மருத்துவத் தாதிப்
பயிற்சியைப் பெற்றார்.
1949 இல் மோதிஜில்
என்ற சேரிப்பகுதியை அடைந்து, “உங்களுக்குத் தொண்டு செய்யவே நான் இங்கு
வந்துள்ளேன். உதவி செய்ய என்னை அழைப்பீர்களா?” என்று கேட்டவாறு
சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்யத் தொடங்குகின்றார். 1950 அக்டோபர் 7 இல்
அன்னை தெரசாவின் தலைமையில், மிஷனரிஸ் ஒஃப் சாரிட்டி இல்லம் (Missionaries
of Charity) தொடங்கப்பட்டது. 1965 இல் இந்த அமைப்பு சர்வதேச அளவில்
வியாபகம் பெற்றது.
சேரிவாழ் ஏழை
மக்களுக்கும் அநாதைகளுக்கும் தொழு நோயாளர்களுக்கும் அவர் செய்துவந்த
தொண்டுகள் அளப்பரியன. “ஏழை நோயாளர்களுக்கு வெறுமனே உபதேசம் செய்பவராக
மட்டும் அன்னை தெரசா இருக்கவில்லை. மாறாக, அவர்களுடன் இணைந்து தமது
வாழ்நாட்களை எல்லாம் அவர்களுக்காகவே செலவிட்டவர். தமக்கென்று எதையும்
சேர்த்து வைக்காமல், எளிய வாழ்க்கை நடத்தியவர்” என்று பத்திரிகையாளரான
குஷ்வந்த்சிங், அன்னை தெரசாவின் தொண்டு பற்றிப் புகழ்ந்துரைத்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
1962 ஆம் ஆண்டு
பொதுச் சேவைக்கான இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது அன்னை தெரசாவுக்கு
வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 1979 அமைதிக்கான நோபல் பரிசும் அவருக்கு
வழங்கப்பட்டது.
அவரின் இடையுறாத
சமூகத்தொண்டை கௌரவிக்குமுகமாக 1980 இல் இந்தியாவின் அதிஉயர் விருதான பாரத
ரத்னா விருதும், 1983 இல் பிரிட்டிஷ் மகாராணி 2ஆம் எலிசபெத் மகாராணியின்
கௌரவ விருதும் அன்னை தெரசாவைத் தேடி வந்தன. 1997 ஆம் ஆண்டு முன்னாள்
அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் அமெரிக்காவின் கௌரவ பிரஜை உரிமை அந்தஸ்தை
வழங்கி அன்னை தெரசாவைக் கௌரவித்தார்.
சுமார் 45 வருடகாலம்
சமூகப் பணிகளில் மிகுந்த அர்ப்பணிப்போடு ஈடுபட்டுவந்த அன்னை தெரசா 1983
ஆம் ஆண்டு இதய நோயால் பாதிக்கப்பட்டார். 1997 செப்டெம்பர் 05 ஆம் திகதி
கல்கத்தாவில் உயிர் நீத்தார்.
பொதுத்
தொண்டுக்காகவே தம்முடைய வாழ்நாளை அர்ப்பணித்த பெண்மணியான அன்னை தெரசா
உலகின் சாதனைப் பெண்களில் ஒருவர் என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது.
அவரது ஏராளமான பொன்மொழிகளில் ஒரு சில வார்த்தைகள் நம் பார்வைக்காக:
“ஒரு புன்னகையில் இருந்தே அமைதி பிறக்கிறது”
“தனிமையும் தன்னிரக்கமுமே மிகப் பயங்கரமான வறுமைநிலையாகும்.”
“நீங்கள் செல்லுமிடமெல்லாம் அன்பைப் பரப்புங்கள்.”
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








