'மருத்துவம் சார்
பட்டப் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, 19ம் தேதி துவங்கி,
26ம் தேதி வரை நடக்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில்,
பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட, எட்டு விதமான, மருத்துவம்
சார்ந்த பட்டப் படிப்புகள் உள்ளன. ஐந்து அரசுக் கல்லூரிகள், 197 தனியார்
கல்லூரிகளிலும், 7,008 இடங்கள் இருந்தன.இதற்கான கலந்தாய்வு, ஆக., 19ம் தேதி
துவங்கி, ஒரு வாரம் தொடர்ந்தது.முதற்கட்ட கலந்தாய்வில், 4,691 பேர்
ஒதுக்கீடு பெற்றனர். மீதம், 2,317 இடங்கள் நிரப்பப்படாமல், காலியாக உள்ளன.
இத்துடன், ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள்சேராமலும், நூற்றுக்கும் மேற்பட்ட
இடங்கள் சேர்ந்துள்ளன.இந்த இடங்களை நிரப்பும் வகையில், இரண்டாம் கட்ட
கலந்தாய்வு, இம்மாதம், 19ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கும் என,
மருத்துவக் கல்வி இயக்ககம்தெரிவித்துள்ளது.'தினமும், 700 முதல் 800 பேர்
பங்கேற்க, அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. மேலும் விவரங்கள்,
tண.டஞுச்டூtட.ணிணூஞ் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள லாம்' என,
அறிவிக்கப்பட்டு உள்ளது.