பள்ளி இடைநிற்றலை
முற்றிலும் தவிர்க்கும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின்
கீழ் பணிகளை கண்காணித்திட, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு),
எஸ்எஸ்ஏ கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், உதவித்திட்ட அலுவலர், கருவூல
அலுவலர் ஆகியோரை கொண்டு கிராம கல்விக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவிற்கு
உதவிட கிராமக் கல்விக்குழு கணக்காளர் காலிப் பணியிடங்களை நிரப்ப மாநிலம்
முழுவதும் நேற்று தேர்வு நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 7
கிராமக் கல்விக்குழு கணக்காளர் பணியிடங்களுக்கு 144 பேர் தேர்வு எழுதினர்.
திருவள்ளூர்
ஆர்.எம்.ஜெயின் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வினை மாவட்ட
கலெக்டர் வீரராகவராவ் பார்வையிட்டார். உடன் கூடுதல் முதன்மைக் கல்வி
அலுவலர் எஸ்.சுந்தரராஜன், உதவி திட்ட அலுவலர் எம்.கே.ஞானசேகரன் உட்பட பலர்
சென்றனர்.