மதுரை: பணி நீக்கம்
செய்யப்பட்ட அரசு பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மீண்டும்பணி வழங்க கோரி
கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தமிழகத்தில் அரசு மேல்நிலை
பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக இருந்த 600க்கும் மேற்பட்டோர் ஆசிரியர்
தகுதித்தேர்வில் தேர்ச்சி அடையாவில்லை என அரசு திடீரென்று பணியை விட்டு
நீக்கியது.
கடந்த ஒரு ஆண்டுகளாக
பணி இழந்த மதுரை மாவட்ட ஆசிரியர்கள் நேற்று கலெக்டர் சுப்பிரமணியனை
சந்தித்து மனு அளித்தனர்.மனுவில், கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில்
பணியாற்றி வந்த நாங்கள்,பணி நிரந்தரம் செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல்
பணியாற்றி வந்தோம்.
கடந்த ஆண்டு ஜூலை
27ம் தேதி எங்கள் அனைவரையும் திடீரென அரசு வேலையில் இருந்து
நீக்கியது.தொடர்ந்து பணியாற்ற வேண்டுமெனில் ஆசிரியர் தேர்வு வாரியம்
நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதால், தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற
முடியவில்லை. எனவே நாங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டோம். எனவே எங்கள்
அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.