ஆசிரியர் தகுதித்தேர்வு தடையானை
உடைக்கப்பட்ட பிறகு அடுத்து என்ன என அனைவரின் மனதிலும் ஒரு கேள்வி உள்ளது.
இனி என்ன தேர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் தங்களின் பணியை ஏற்று கொள்ள
போகிறார்கள் அவர்களுக்கு விரைவில் பணிநியமன ஆணை கிடைக்கப்போகிறது.தேர்வு
பெறாதவர்கள் என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
செய்யலாம் உச்ச
நீதி மன்றத்தில் ஒரு சீராய்வு மனுதாக்கல் செய்யலாம் சீராய்வு மனு என்பது
அரசு வெளியிட்ட எந்த ஒரு ஆணையும் அதாவது அரசின் நெறிமுறை கோட்பாடுகளில்
எதாவது மக்களுக்கு பிரச்சனை இருப்பின் அரசானைகளை சீராய்வு செய்ய கூறி உச்ச
நீதிமன்றத்தில் மனு அளிக்கலாம். இதனை உச்சநீதிமன்றம் ஏற்றால் அந்த மனு
விசாரனைக்கு வரும் இந்த பணிநியமனத்திற்கு மீண்டும் இடைக்கால தடை
விதிக்கலாம். ஆனால் தற்போது சென்னை உயர் நீதி மன்றம் சரியாக கூறிவிட்டது
அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு தான் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு
எழுதியுள்ளனர். இதற்கு விளக்கம் என்னவென்றால் ஆசிரியர் தேர்வு வாரியம்
நினைத்தால் தேர்வு எழுதிய யாருக்கும் எந்த முறையில் வேண்டுமானலும் பணி
நியமனம் அளிக்கலாம். எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது தேர்ந்தெடுத்த
ஆசிரியர்களை மாற்ற அவர்களிடமோ அரசிடமோ எந்த திட்டமும் இல்லை எனவே இந்த
வழக்கு உச்சநீதி மன்றம் சென்றாலும் அவை உடனடியாக தள்ளுபடி செய்யவே வாய்ப்பு
அதிகமாக உள்ளது.
ஏமாற வேண்டாம்
நண்பர்களே இந்த
வழக்கு இனிமேல் உச்சநீதிமன்றம் சென்றாலும் கண்டிப்பாக சட்ட விதிகளின்படி
செல்லாது. தெளிவாக சொல்ல வேண்டுமானல் நீங்கள் தகுதி தேர்வு எழுதும் போது
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டுதான்
இந்த தேர்வை எழுதியுள்ளீர்கள். அந்த நிபந்தனைகளை ஏற்பதாக கையெழுத்தும்
போட்டுள்ளீர்கள் எனவே அரசு புதிய அரசானைகளை எப்போது வேண்டுமானாலும்
வெளியிடலாம் பணிநியமனத்தில் எப்படி வேண்டுமானலும் மாற்றம் கொண்டுவரலாம்
என்பதே நமக்கு சொல்லப்படாத விதிமுறை அதில் நாம் கையெழுத்து போட்டுவிட்டோம்.
எனவே அரசு எடுக்கும் முடிவே இறுதியானது.
நண்பர்கள்
யாரும் உச்ச நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்தால் அது உங்களுக்கு பணவிரயம்
தான் நானும் ஒரு தேர்வு பெறாத நபர்தான் உண்மையை புரிந்து கொள்ளுங்கள் இது
தான் நமது சட்ட விதிமுறை இதை நாம் மாற்ற முடியாது அரசுக்கு வேண்டுமானல்
கோரிக்கை வைக்கலாம் தவிர நாம உச்சநீதி மன்றம் சென்று எதையும் செய்ய இயலாது.
சொல்லப்போனால் 5% தளர்வை நிச்சயமாக நீக்க முடியாது அது வன்கொடுமை சட்ட
பிரச்சனை ஏற்படும் அரசின் கொள்கை வேறு எனவே யாரும் உங்களின் பணத்தை
வீண்க்காமல் இனி வரும் தேர்வுக்கு படியுங்கள் நாளை நமதே வெற்றி நிச்சயம்.