
பொதுக்குழு கூட்டம்
நாகை மாவட்ட தமிழ்நாடு
உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாகை
அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கவுரவ தலைவர்
இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சரவணன், மாவட்ட செயலாளர் அசோக்குமார்,
மாவட்ட துணை தலைவர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர்
ஜோதிராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் லீலாவதி கலந்து கொண்டு
பேசினார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பட்டதாரி ஆசிரியர்
கழகத்தின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக ஏற்க வலியுறுத்தி வருகிற 28–ந் தேதி
நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, புதிய
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே
அமுல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பும், அதற்கான அரசாணையை தமிழக
அரசு வெளியிட வேண்டும்.
ஒளிவு மறைவின்றி
மேலும், வருகிற
கல்வியாண்டில் நடைபெறவுள்ள பொது மாறுதலில் அனைத்து காலி பணியிடங்களையும் ஒளிவு
மறைவின்றி வெளிப்படையான கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் தகுதித்தேவை
முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட, வட்ட பொறுப்பளர்கள் பாஸ்கரன், முருகையன்,
காந்தி, லூயிஸ், ஆரோக்கியசாமி, ஜெரோம், ஆனந்தன், தங்கதுரை, செந்தில், முருகன்,
முருகேசன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைமையிட செயலாளர்
சங்கர் நன்றி கூறினார்