தமிழக பட்ஜெட்டில், விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.1,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்ற விவரம் வருமாறு;
புதுவாழ்வுத் திட்டம்
* மாநில திட்ட ஒதுக்கீடு ரூ.55,100 கோடியாக மேலும் உயர்வு.
* புதிய திட்டமான மாநில சமச்சீர் வளர்ச்சி நிதிக்கு ரூ.100 கோடி.
* சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.75 கோடி.
* புதுவாழ்வுத் திட்டத்திற்காக ரூ.255.04 கோடி. தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்ற விவரம் வருமாறு;
புதுவாழ்வுத் திட்டம்
* மாநில திட்ட ஒதுக்கீடு ரூ.55,100 கோடியாக மேலும் உயர்வு.
* புதிய திட்டமான மாநில சமச்சீர் வளர்ச்சி நிதிக்கு ரூ.100 கோடி.
* சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.75 கோடி.
* தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு ரூ.250.36 கோடி.
* தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்திற்காக ரூ.250 கோடி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்திற்காக ரூ.107 கோடி.
* காவல் துறைக்கு ரூ.5,568.81 கோடி.
* தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ரூ.198.96 கோடி.
* சிறைச்சாலைகள் துறைக்கு ரூ.227.03 கோடி.
* நீதி நிர்வாகத் துறைக்கு ரூ.809.70 கோடி.
* சாலைப் பாதுகாப்பு நிதிக்காக ரூ.165 கோடி.
வேளாண் துறை
* தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.46.77 கோடி.
* உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.662.36 கோடி.
* வருவாய்த் துறைக்கு ரூ.6,126.03 கோடி.
* வேளாண் துறைக்கு ரூ.6,613.68 கோடி.
* நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.200 கோடி.
* ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்திற்கு ரூ.111.97 கோடி.
* தமிழ்நாடு விதைகள் மேம்பாட்டு முகமை என்ற புதிய அமைப்பிற்கு ரூ.25 கோடி.
* தமிழ்நாடு கூட்டுறவு இணையத்திற்கு ரூ.150 கோடி.
* பயிர் கடன்களுக்கு வட்டி மானியம் வழங்க ரூ.200 கோடி.
* பண்ணை எந்திரங்கள் வாங்க ரூ.100 கோடி.
பால் வளத்துறை
* நெல்லுக்கான மாநில அரசின் உற்பத்தி ஊக்கத் தொகைக்காக ரூ.200 கோடி.
* கால்நடை தீவன உற்பத்தி மேம்பாட்டிற்கு ரூ.25 கோடி.
* பால் வளத்துறைக்கு ரூ.100.68 கோடி.
* மீன்பிடிப்பு குறைவாக உள்ள காலங்களிலும், மீன்பிடி தடை செய்யப்பட்ட காலங்களிலும் வழங்கப்படும் நிதி உதவிக்காக ரூ.183 கோடி.
* மீன் வளத்துறைக்கு ரூ.728.68 கோடி.
* உணவு மானியத்திற்கு ரூ.5,300 கோடி.
* நதிநீர் இணைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள ரூ.253.50 கோடி.
* காவிரி வடிநில பருவநிலை மாற்றத் தழுவல் திட்டத்திற்கு ரூ.200 கோடி.
* நீர்ப்பாசனத் துறைக்கு ரூ.3,727.37 கோடி.
* தமிழ்நாடு பல்லுயிரினப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டத்திற்கு ரூ.122.68 கோடி.
மரக்கன்று நடும் திட்டம்
* 67 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு ரூ.53.72 கோடி.
* சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்காக ரூ.754.19 கோடி.
* மின்சாரத் துறைக்கு மொத்த நிதியுதவியாக ரூ.13,586 கோடி.
* ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு என நெடுஞ்சாலைத் துறைக்கு மொத்தமாக ரூ.8,228.24 கோடி.
* 427 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்த ரூ.2,414 கோடி.
* 145 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை 4 வழிச் சாலைகளாக தரம் உயர்த்த ரூ.1,261.95 கோடி.
* அரசு போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு. மாணவ&மாணவியர்களுக்கு இலவச பஸ் பயண மானியமாக ரூ.480 கோடி.
புதிய தொழில் முனைவோர்
* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு மூலதன மானியமாக ரூ.80 கோடி. மின்னாக்கி மானியம் ரூ.42 கோடி. வட்டி மானியம் ரூ.12 கோடி. புதிய தொழிற்பேட்டைகளுக்கான கட்டமைப்பு நிதியுதவி ரூ.60 கோடி ஒதுக்கீடு.
* புதிய தொழில் முனைவோர் & தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.100 கோடி. வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்திற்கு மானியமாக ரூ.15 கோடி ஒதுக்கீடு.
* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ.365.91 கோடி.
* தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.150 கோடியாக உயர்வு.
* தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கு ரூ.82.94 கோடி.
* கைத்தறி மற்றும் நெசவுத் தொழில் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.499.16 கோடி ஒதுக்கீடு.
உள்ளாட்சி அமைப்பு
* கைத்தறி துணிகளின் விற்பனையை ஊக்குவிப்பதற்கான தள்ளுபடி மானியத் திட்டத்திற்கு ரூ.78.45 கோடி.
* கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,422.07 கோடியாகவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3,926.32 கோடியாகவும் உயர்வு.
* தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.750 கோடி.
* பசுமை வீடுகள் திட்டத்திற்கு ரூ.1,260 கோடி ஒதுக்கீடு.
* இந்திரா வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட 656.10 கோடி ஒதுக்கீடு.
* 6 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு சாலைகளை மேம்படுத்த ரூ.1,400 கோடி.
* சட்டமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதிக்கு ரூ.470 கோடி.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.5,248 கோடி ஒதுக்கீடு.
* கிராமப்புற திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு ரூ.200 கோடி. மேலும், கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தை செயல்படுத்த ரூ.200 கோடி.
மழைநீர் வடிகால் பணி
* சென்னை மாநகர வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.500 கோடி. ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.750 கோடி. தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்திற்கு ரூ.420.05 கோடி.
* பேரூராட்சிகளின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளுக்காக ரூ.140.32 கோடி.
* தமிழ்நாட்டில் உள்ள 12 மாநகராட்சிகளையும் திறன்மிகு நகரங்கள் (ஸ்மாட் சிட்டி) திட்டத்தில் சேர்க்க ரூ.400 கோடி ஒதுக்கீடு. தேசிய நகர்ப்புற வளர்ச்சி இயக்கத்திற்காக ரூ.500 கோடி. பாரம்பரிய நகர மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்த ரூ.46 கோடி ஒதுக்கீடு.
* சென்னை மாநகர மழைநீர் வடிகால் பணிக்கு ரூ.152 கோடி.
* நிதிநிலை பலவீனமாக உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த ரூ.133.33 கோடி ஒதுக்கீடு.
* நகர்ப்புறங்களில் தூய்மை இந்தியா இயக்கத்தை செயல்படுத்த ரூ.150 கோடி.
* பாதுகாப்பான குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.1,803.30 கோடி ஒதுக்கீடு.
* தேசிய கிராமப்புறக் குடிநீர்த் திட்டத்திற்காக மாநில அரசின் பங்கு உள்பட மொத்தமாக ரூ.343 கோடி ஒதுக்கீடு.
* அடிப்படை தேவைகள் திட்டத்திற்கு ரூ.186.35 கோடி.
மக்கள் நல்வாழ்வு
* அனைவருக்கும் வீட்டுவசதி அளிக்கும் திட்டத்திற்கு ரூ.289.16 கோடி.
* சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ.615.78 கோடி.
* மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.8,245.41 கோடியாக உயர்வு.
* முதல்&அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.781 கோடி. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்திற்கு ரூ.668.32 கோடி. அம்மா குழந்தை நல பரிசு பெட்டக திட்டத்திற்கு ரூ.50 கோடி. மகளிர் சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.60.58 கோடி ஒதுக்கீடு.
* தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டத்திற்கு ரூ.23.52 கோடி.
* தேசிய சுகாதார இயக்கத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.1,342.67 கோடி.
* பள்ளி கட்டமைப்புகளை தொடர்ந்து வலுப்படுத்த ரூ.450.96 கோடி.
* விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், 4 சீருடை தொகுப்புகள், புத்தகப்பைகள், காலணிகள், வடிவியல் பெட்டிகள், வரைபடப் புத்தகங்கள், க்ரேயான்கள், கலர் பென்சில்கள், கம்பளி ஆடைகள் போன்றவை வாங்க ரூ.1,037.85 கோடி. விலையில்லா மிதிவண்டிகள் வழங்க ரூ.219.50 கோடி ஒதுக்கீடு.
* பள்ளி கல்வித்துறைக்கு ரூ.20,936.50 கோடி ஒதுக்கீடு.
உயர் கல்வித்துறை
* முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை திருப்பி அளிக்கும் திட்டத்திற்கு ரூ.569.25 கோடி ஒதுக்கீடு.
* அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவியாக ரூ.110.57 கோடி.
* உயர் கல்வித்துறைக்கு ரூ.3,696.82 கோடி.
* விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்காக ரூ.149.70 கோடி.
* சுற்றுலாத்துறைக்கு ரூ.183.14 கோடி.
* பல்வேறு திருமண நிதியுதவி திட்டங்களுக்கு ரூ.703.16 கோடி (இதில் திருமாங்கல்யம் செய்வதற்கான தங்க நாணயங்களுக்கு ரூ.204 கோடி செலவிடப்படும்).
* பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.140.12 கோடி.
* ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,575.36 கோடி.
* எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்திற்கு ரூ.1,470.53 கோடி.
விலையில்லா பொருட்கள்
* விலையில்லா மின்விசிறிகள், மிக்சிகள் மற்றும் கிரைண்டர்கள் கொண்ட சிறப்பு திட்ட அமலாக்கத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி.
* விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.1,100 கோடி.
* ஆதி திராவிடர் துணைத் திட்டத்திற்கு ரூ.11,274.16 கோடி. பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கு ரூ.657.75 கோடி ஒதுக்கீடு.
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு குழந்தைகள் கல்வி பயில ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு ரூ.55.11 கோடி.
* பள்ளி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.56.37 கோடியும், உயர் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.674.98 கோடியும் ஒதுக்கீடு.
* 42 பழங்குடியினர் விடுதி மாணவர்களின் உணவுச் செலவுக்கு ரூ.102.79 கோடி.
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி கட்டமைப்பை மேம்படுத்தவும், விடுதிகளை பராமரிக்கவும் ரூ.162.91 கோடி ஒதுக்கீடு.
தொழிலாளர் நலத்துறை
* தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு பங்கு மூலதன உதவியாக ரூ.20 கோடி.
* ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.50 கோடி.
* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித் திட்டங்களுக்கு ரூ.250.49 கோடியும், விடுதிப் பராமரிப்பு மற்றும் உணவுச் செலவினங்களுக்காக ரூ.82.69 கோடியும் ஒதுக்கீடு.
* கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்காக ரூ.101.59 கோடி.
* சிறுபான்மையினர் நலனுக்காக ரூ.115.80 கோடி.
* மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களுக்கு ரூ.364.62 கோடி.
* தொழிலாளர் நலத்துறைக்காக ரூ.139.26 கோடி.
* இலங்கைத் தமிழர் நலனுக்காக ரூ.108.46 கோடி.
* ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்காக ரூ.18,668 கோடி ஒதுக்கீடு.
மேற்கண்ட விவரங்கள் பட்ஜெட் உரையில் இடம் பெற்று உள்ளன.