விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்}2 அரசு பொதுத்
தேர்வை 36,899 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வை மாவட்ட ஆட்சியர் வா.சம்பத்
பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழகம் முழுவதும் மார்ச் 5-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பிளஸ்}2 அரசு பொதுத் தேர்வு நடைபெறுகிறது.விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் புனித பிலோமினால் மேல்நிலைப்
பள்ளி, சிங்கனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற
தேர்வுகளை மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு
அவர் கூறியது:
விழுப்புரம் மாவட்டத்தில் 253 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 17,869 மாணவர்களும், 19,030 மாணவிகளும் பிளஸ்}2 தேர்வினை எழுதினர்.
விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 10,656 மாணவ, மாணவிகளும், திண்டிவனம்
கல்வி மாவட்டத்தில் 14,435 மாணவ, மாணவிகளும், கள்ளக்குறிச்சி கல்வி
மாவட்டத்தில் 11,808 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 36,899 பேர் 105
மையங்களில் தேர்வு எழுதினர்.
தேர்வு மையங்களைக் கண்காணிக்க 112 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 112
துறை அலுலர்களும், 297 பறக்கும்படையினரும், 1,840 அறை கண்காணிப்பாளர்களும்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் இருக்கை, குடிநீர், கழிவறை, மின்சாரம், பேருந்து
போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மின் பகிர்மான கழகம் மூலம் தேர்வு
அறைகளுக்கு மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை
பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேபோல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் கோ.ராதா விழுப்புரம் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ் உடனிருந்தார்.
2








