முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, பிப்ரவரி 6-ந் தேதி முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டு, கவர்னர் உரை பற்றி ஆலோசிக்கப்பட்டது.
8-ந்தேதி நடக்கிறது
இந்த நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இம்மாத இறுதியில் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்படும். பின்னர் ஒவ்வொரு துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படும்.
இந்த சூழ்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பதாக அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இந்தக் கூட்டம் 8-ந்தேதி (நாளை) மாலை 3 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.
அரசியல் விவகாரங்கள்
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட் பற்றி விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு துறைகளிலும் அறிவிக்கப்படவுள்ள சிறப்புத் திட்டங்கள், தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள், எதிர்க்கட்சிகள் எழுப்பும் அரசியல் ரீதியான விவகாரங்கள் ஆகியவை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளன.








