வனத்துறையில் காலியாகவுள்ள வனவர், கள உதவியாளர்
தேர்வுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான
தாற்காலிக விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.இதுகுறித்து, வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத்
தேர்வுக்கான விடைகள் வனத் துறையின் இணையதளத்தில்
(ஜ்ஜ்ஜ்.ச்ர்ழ்ங்ள்ற்ள்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) வெளியிடப்பட்டுள்ளன.
விடைகளில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால், அந்தக் கருத்தை அரசால்
அங்கீகரிக்கப்பட்ட உரிய ஆதாரங்களுடன் எழுத்துப்பூர்வமாக தமிழ்நாடு வனச்
சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமத்துக்கு வரும் 13-ஆம் தேதி மாலை 5
மணிக்குள் கிடைக்கும்படி விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல் அல்லது மின்னஞ்சல்
(ற்ய்ச்ன்ள்ழ்ஸ்ரீ.ற்ய்ஸ்ரீட்ய்ஃய்ண்ஸ்ரீ.ண்ய்) மூலம் அனுப்ப வேண்டும்.
இதைத் தொடர்ந்து சரியான விடைகள் இறுதியாக இணையதளத்தில் வெளியிடப்படும்
என்று வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.








