பி.எஸ்.என்.எல். தரைவழித் தொலைபேசி வாயிலாக, இரவு
நேரத்தில் அனைத்து தொலைபேசி, செல்லிடப்பேசிகளுக்கும் இலவசமாகத் தொடர்பு
கொள்ளும் வசதி, மே 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என பி.எஸ்.என்.எல்.
நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட
செய்திக்குறிப்பு: தரைவழித் தொலைபேசி (லேண்ட் லைன்) மூலம், நாடு முழுவதும்
உள்ள அனைத்து நிறுவனத்தின் செல்லிடப்பேசி, தொலைபேசிகளுக்கு மேற்கொள்ளும்
இரவு நேர அழைப்புகளை, மே 1-ஆம் தேதியிலிருந்து இலவச அழைப்புச் சேவையாக
வழங்க உள்ளோம்.
கிராமம், நகர்ப்புறத் திட்டங்கள், சிறப்புத் திட்டங்கள், இணையத்துடன்
கூடியத் திட்டங்கள் என அனைத்து வகையான தொலைபேசி இணைப்புத்
திட்டங்களுக்கும், இந்த இலவசச் சலுகை பொருந்தும்.
இந்தத் திட்டத்தின்படி, பி.எஸ்.என்.எல். தரைவழித் தொலைபேசி மூலம், இரவு 9
மணியிலிருந்து காலை 7 மணி வரை செய்யப்படும் அழைப்புகள் இலவச அழைப்பாகக்
கணக்கில் கொள்ளப்படும். புதிய வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள பி.எஸ்.என்.எல்.
சேவை மையங்களிலோ அல்லது கட்டணமில்லா இலவச எண்ணிலோ (18003451500) தொடர்பு
கொண்டு இந்தச் சேவையைப் பெறலாம்.
மேலும் பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசியிலிருந்து 54141 என்ற எண்ணுக்கு
அல்லது பிற நிறுவனங்களின் செல்லிடப்பேசியிலிருந்து 9400054141 என்ற
எண்ணுக்கு
கக என தட்டச்சு செய்து குறுஞ்செய்தி வாயிலாக வீட்டில் இருந்தபடியே,
இந்தச் சேவையைப் பெறலாம் என அந்தச் செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.