அரசு உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித்
தேர்வுக்கு கடந்த 4 நாள்களில் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் தங்களது
விண்ணப்பங்களை இணைய வழியில் (ஆன்-லைன்) பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக, கடந்த 2 நாள்களில் மட்டும் 1 லட்சத்து 40
ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இளநிலை உதவியாளர்கள் பணி நியமனத்துக்கான போட்டித்
தேர்வு மே 31-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுத்
தேர்வுகள் இயக்கக சேவை மையங்களிலேயே இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள்
வழங்கப்படுகின்றன.
உரிய சான்றிதழ்களுடன் சென்று இந்த மையங்களிலேயே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி தேதி மே 6 ஆகும்.
இந்தத் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 15 லட்சம்
விண்ணப்பங்கள் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வக உதவியாளர் பணி நியமனம் அந்தந்த மாவட்ட அளவில் நடைபெறுகிறது.
போட்டித் தேர்வில் வெற்றி பெறுவோரிலிருந்து 1:5 என்ற விகிதத்தில்
தேர்வர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர்.