தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் பி.ஐயம்பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், பள்ளி
மாணவ-மாணவிகளுக்கான கோடை கால அறிவியல் பயிற்சி முகாம் மே 12-ந் தேதி முதல்
14-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்தப்பட உள்ளது.
இந்த பயிற்சி முகாம் பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தில்
நடைபெற உள்ளது.
இதில், 7-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள்
கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி முகாமில், இயற்பியல், வேதியியல், கணிதம்,
வானவியல், சுற்றுச்சூழல் அறிவியல், உளவியல் மற்றும் வானியல் கண்காணிப்பு
குறித்த கருத்தரங்குகள் மற்றும் ஆய்வரங்குகள் நடத்தப்படும்.
இந்த பயிற்சி முகாமிற்கு 50 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவதால், முதலில்
வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் மாணவர்கள்
சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இது குறித்த மேலும் விவரங்களுக்கு
044-24410025 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.