காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 2 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து ஆட்சியர் வி.கே. சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 204 ஆய்வக
உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில் போட்டித் தேர்வு நடைபெற உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க வசதியாக அரசுத் தேர்வுகள் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.ஆண் விண்ணப்பதாரர்கள் மதுராந்தகம் அருகே சின்னகொலம்பாக்கத்தில் உள்ள
ஸ்ரீ கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியிலும், பெண் விண்ணப்பதாரர்கள்
தாம்பரம் சேலையூர் இந்திரா நகரில் உள்ள சியோன் மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியிலும் விண்ணப்பிக்கலாம் என முன்னர்
அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது கூடுதலாக காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள
அந்திரசன் மேல்நிலைப்பள்ளியில் பெண் விண்ணப்பதாரர்களுக்கும், விக்டோரியா
மேல்நிலைப்பள்ளியில் ஆண் விண்ணப்பதாரர்களுக்கும் சேவை மையங்கள் புதிதாகத்
திறக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 2 மையங்களிலும்
இருபாலரும் விண்ணப்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று, அதில்
தெரிவித்துள்ளார்.








