எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின்
தமிழ்ப் பேராயம் சார்பில் நடத்தப்படும் கணினித் தமிழ் சான்றிதழ்
படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது என்று தமிழ்ப் பேராயத்
தலைவரும்,எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகப் பதிவாளருமான என்.சேதுராமன் கூறினார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
தமிழ்ப் பேராயம் சார்பில் கடந்த 4 ஆண்டுகளாக
நடத்தப்பட்டு வரும் கணினித் தமிழ் அடிப்படை, பயன்பாடு சான்றிதழ்
படிப்புக்கான பயிற்சி வகுப்புகள் வரும் மே மாதம் 4ஆம் தேதி தொடங்கி 29ஆம்
தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தச் சான்றிதழ் படிப்பு மூலம் கணினியின் அடிப்படை
பயன்பாடு குறித்தும்,கணினி சார்ந்த பணிகளை தமிழில் மேற்கொள்வது குறித்தும்
பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சக் கல்வித் தகுதி 10ஆம் வகுப்பில்
தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு இல்லை. வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு தங்குமிடம்,உணவு வசதி உண்டு.
இந்த சான்றிதழ் படிப்புக்கான கட்டணம் ரூ.1,000.
வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக
வளாகத்தில் நடைபெறும்.
மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிய
இல.சுந்தரம், கணினித் தமிழ் கல்வித்துறை
ஒருங்கிணைப்பாளர்,தமிழ்ப்பேராயம்,எஸ்.ஆர்.எம்.பல்கலைக்
கழகம்,காட்டாங்கொளத்தூர், சென்னை-603203. தொலைபேசி எண் 044-27417375
செல்லிடப்பேசி 9790900230 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.








