தமிழக அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி காரணமாக, தமிழ்நாடு வருவாய்த்துறை
அலுவலர்கள் 12 ஆயிரம் பேர், வருகிற 24, 25-ந் தேதிகளில் வேலை நிறுத்தத்தில்
ஈடுபட உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் த.சிவஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போராட்டம் குறித்து பிரசாரம்இது குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் த.சிவஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், வருவாய்த்துறை அலுவலகங்களில் பாதுகாக்கப்படும் விலை மதிப்பற்ற ஆவணங்களை பாதுகாக்கும் வகையில், இரவு காவலர் மற்றும் ஜீப் ஓட்டுனர்கள் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் காலமுறை ஊதியத்தில் நிரப்புதல், வருவாய்த்துறையில் காலியாக உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 6-ந் தேதி முதல், அனைத்து மாநில நிர்வாகிகளும், அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்த போராட்டத்தின் அவசியம் குறித்து பிரசாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில், தமிழக அரசின் அழைப்பினை ஏற்று கடந்த 19-ந் தேதி, மாலை 6 மணியளவில், வருவாய்த்துறை அரசு செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோருடன் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது, ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைகள் குறித்து அரசாணை வெளியிடாத நிலையில், வெற்று வாக்குறுதிகள் மட்டுமே மீண்டும் அளிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
வேலை நிறுத்த போராட்டம்
அதைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி, வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில், வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் உள்பட 12 ஆயிரம் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.