மாநிலக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து மாநில கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திங்கள் கிழமை வெளியிட்ட செய்தி:
ஆண்டுதோறும் இதுபோன்ற பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளிப்பதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் ஊக்குவிக்கப்படுகிறது.
மொத்தம் 22 நாள்கள் வழங்கப்பட உள்ள இந்தப் பயிற்சிகளின் மூலமாக ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்படுவதோடு, கூர்ந்து ஆராயும் திறனும், மொழித் திறனில் வல்லமையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








