மதுரை மருத்துவக் கல்லூரியில்
நடப்புக் கல்வியாண்டில் முதல் மாணவியாக, கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த பழைய
மாணவி சனிக்கிழமை சேர்ந்தார்.
தமிழகத்தில், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்
சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது. இதில், மதுரை அரசு
மருத்துவக் கல்லூரிக்கு அகில இந்திய ஒதுக்கீடான 23 பேர் தவிர்த்து, தமிழக
ஒதுக்கீட்டிற்கான 132 மாணவ, மாணவியர் கலந்தாய்வில் தேர்வாகியுள்ளனர்.
இவர்களில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த
மாணவி பி.நிவேதா மதுரை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதிச்சீட்டுடன்
சனிக்கிழமை வந்தார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த அவர்,
கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்தவர். அவரது கட்-ஆப் மதிப்பெண் 198.25. அவர்
மதுரை மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு முதல் மாணவியாக சேர்த்துக்
கொள்ளப்பட்டார்.