ரயில் பயணத்திற்கான இ - டிக்கெட்டு களை, ஆன் - லைனில் பதிவு செய்வதற்கு
அடையாளமாக, ஆதார் அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும். ஆதார் எண் இல்லையெனில்,
டிக்கெட் பதிவு செய்ய முடியாது' என்று ஐ.ஆர்.சி.டி.சி.,
அறிவித்துள்ளது.ஆன் - லைன் மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து,
கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கும்படி,
ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு, ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.
இதையடுத்து,
'ஆதார் எண் இல்லை என்றால், ஆன் - லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய
முடியாது' என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.இ - டிக்கெட் பதிவு செய்ய
விரும்பும் பயணி, ஐ.ஆர்.சி.டி.சி., வலைதளத்தில், தன் ஆதார் எண்ணை பதிவு
செய்ய வேண்டும். இந்த பதிவை பரிசீலித்த பின், நுகர்வோருக்கு
'பாஸ்வேர்டு'வழங்கப்படும். இதை பயன்படுத்தி,
டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யலாம்.