படிப்பு வரவில்லையே என்ற வேதனையில் பள்ளி மாணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
நாகர்கோவிலில் நடந்த இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பள்ளி மாணவன்
நாகர்கோவில் வடசேரி புளியடித் தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மனைவி பாக்கியலெட்சுமி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் அய்யப்பன் இறந்து விட்டார்.
மூத்த மகன் ஓட்டல் சர்வராகவும், 2–வது மகன் டிரைவராகவும் உள்ளனர். 3–வது மகன் சக்திவேல் (வயது 16) நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஒரு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தான்.
இடையில் 2 ஆண்டுகள் பாக்கியலெட்சுமி மற்றும் மகன்கள் 3 பேரும் கேரளாவுக்கு
சென்று விட்டதால் சக்திவேல் படிப்பு தடைபட்டது. இந்தநிலையில் இந்த
கல்வியாண்டில் சக்திவேல் 9–ம் வகுப்பில் சேர்க்கப்பட்டு படித்து வந்தார்.நாகர்கோவிலில் நடந்த இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பள்ளி மாணவன்
நாகர்கோவில் வடசேரி புளியடித் தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மனைவி பாக்கியலெட்சுமி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் அய்யப்பன் இறந்து விட்டார்.
மூத்த மகன் ஓட்டல் சர்வராகவும், 2–வது மகன் டிரைவராகவும் உள்ளனர். 3–வது மகன் சக்திவேல் (வயது 16) நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஒரு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தான்.
மாயம்
அவருக்கு சரியாக படிப்பு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவருடைய அண்ணன்கள், சக்திவேலுக்கு டியூசன் ஏற்பாடு செய்தனர். அதன்பிறகும் சக்திவேலுக்கு படிப்பு வரவில்லை எனத்தெரிகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் சக்திவேல் காணப்பட்டான். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து டியூசனுக்கு சென்றான். வழக்கமாக இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பும் சக்திவேல் 10 மணிக்கு மேலாகியும் வீட்டுக்கு வரவில்லை.
இதனால் அவருடைய அண்ணன்கள் 2 பேரும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவில் வடசேரி போலீஸ் நிலையத்தில் அவர்கள் தகவல் கொடுத்தனர். போலீசாரும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை வடசேரி போலீஸ் நிலையத்துக்கு சக்திவேலின் அண்ணன்கள் அடையாளம் காண்பதற்காக அவருடைய போட்டோவை கொடுக்கச் சென்றனர்.
தண்டவாளத்தில் பிணம்
அப்போது வடசேரி போலீஸ் நிலையத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் இருந்து பேசிய நபர் நாகர்கோவில் ஆராட்டுரோடு அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் ஒரு பள்ளி சீருடை அணிந்த மாணவன் உடல் சிதைந்த நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் நிலையத்துக்கு போட்டோ கொடுக்கச் சென்ற சக்திவேலின் அண்ணன்கள் உடனே அங்கு சென்றனர். இதற்கிடையே நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கலைவாணன் தலைமையிலான போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அங்கு பிணமாக கிடந்தவரின் 2 கால்கள் துண்டிக்கப்பட்டும், முகம் சிதைந்த நிலையிலும் உடல் கிடந்தது. அவர் அணிந்திருந்த உடையை வைத்து அது தங்களது தம்பிதான் என்று போலீசாரிடம் சக்திவேல் அண்ணன்கள் கதறி அழுதபடி தெரிவித்தனர்.
உடல் ஒப்படைப்பு
இதையடுத்து போலீசார் சக்திவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
படிப்பு சரியாக வரவில்லையே என்ற வேதனையில் ரெயில் முன் பாய்ந்து சக்திவேல் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து சக்திவேல் அண்ணன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.