தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் 25-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது.
இதன் பிறகு 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதன் பிறகு சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கமாக பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் ஒவ் வொரு துறை வாரியாக மானிய கோரிக்கை எடுத்து கொள்ளப்படுவது வழக்கம். இதில் எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு சம்பந்தப்பட்ட துறை யின் அமைச்சர் விரிவாக பதிலளித்து பேசுவார். சுமார் 1 மாதம் இந்த கூட்டம் நடை பெறுவது உண்டு.ஆனால் கடந்த மார்ச் மாதம் சட்டசபை கூட்டம் நடந்தபோது ஓ.பன்னீர்செல் வம் முதல்-அமைச்சராக இருந்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி, மே 23-ந்தேதி ஜெயலலிதா
மீண்டும் முதல்வராக பதவி ஏற்றதும் உடனடியாக சட்ட சபை கூட்டப்படும் என்று
எதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஜூன்
மாதம் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் ஜெய லலிதா எம்.எல்.ஏ.வாக நின்று
வெற்றி பெற்றார். இதனால் ஜூலையில் சட்டசபை கூட் டம் நடைபெறும் என்று பலரும்
எதிர்பார்த்தனர்.ஆனாலும் தேர்தல் முடிந்து 40 நாட்கள் ஆகியும் சட்டசபை
கூட்டம் நடை பெறவில்லை.