குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி ஒதுக்கீட்டு ஆணையை தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் வழங்கினார். சைதை
துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த பெண் முதல் இடம் பெற்றார்.
பணி ஒதுக்கீட்டு ஆணை
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1136 அரசு அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப்-2 தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு 5 ஆயிரத்து 636 பேர் அழைக்கப்பட்டனர். சான்றிதழ் சரிபார்த்தல் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் மே மாதம் 8-ந் தேதி வரை நடத்தப்பட்டது. கடந்த 13-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
கலந்தாய்வுக்கு 2 ஆயிரத்து 222 பேர் அழைக்கப்பட்டனர். கலந்தாய்வு நேற்று
தொடங்கியது. கலந்தாய்வில் தரவரிசை பட்டியல் படி முதல் 10 இடங்களில்
கலந்துகொண்டவர்களுக்கு பணி ஒதுக்கீட்டு ஆணையை தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் வழங்கினார். அருகில்
செயலாளர் எம்.விஜயகுமார் உடன் இருந்தார்.பணி ஒதுக்கீட்டு ஆணை
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1136 அரசு அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப்-2 தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு 5 ஆயிரத்து 636 பேர் அழைக்கப்பட்டனர். சான்றிதழ் சரிபார்த்தல் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் மே மாதம் 8-ந் தேதி வரை நடத்தப்பட்டது. கடந்த 13-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
பணி ஒதுக்கீட்டு ஆணை பெற்ற 10 பட்டதாரிகள் விவரம் வருமாறு:-
முதல் 10 இடம்
1. ஜெயப்பிரீத்தா, 2. ரெங்கநாதன் வெங்கட்ராமன், 3. சாந்தலட்சுமி, 4. சிவன் காளை, 5. தமிழரசி, 6. ரூபியா பேகம், 7. அமுதா, 8. சாய் ஸ்ரீ மாரி, 9. ராஜா, 10. அறிவழகன்.
வணிக வரித்துறை அதிகாரிகள்
10 பேரில் அமுதா மட்டும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் உதவி பிரிவு அதிகாரி பணிக்கான ஆணையை பெற்றார். மற்ற 9 பேரும் துணை வணிக வரித்துறை அதிகாரிக்கான பணி நியமன ஆணைகளை பெற்றனர்.
10 பேரில் 8 பேர் என்ஜினீயரிங் படித்தவர்கள். இதில் 2 பேர் மட்டும் கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள்.
பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிராம நிர்வாக அலுவலர்கள்
நேர்முகத்தேர்வுடன் கூடிய குருப்-2 தேர்வுக்கான கலந்தாய்வு தொடங்கி உள்ளது. இந்த கலந்தாய்வு செப்டம்பர் 1-ந் தேதி வரை நடக்க உள்ளது. தினமும் 300 பேர் அழைக்கப்படுகிறார்கள். கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு காலிப்பணியிடங்கள் 800 வந்துள்ளன. அதுபோல நேர்முகத்தேர்வு அல்லாமல் நடத்தப்படும் குரூப்-2 தேர்வுக்கான பணிகள் 700 வந்துள்ளன. இந்த பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வட்டார சுகாதார புள்ளியல் அதிகாரிகள் காலிப்பணியிடங்கள் 180 உள்ளன. சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் உதவி சிறைச்சாலை அதிகாரிகள் காலிப்பணியிடங்கள் 70 காலியாக உள்ளன.
இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 3 மற்றும் 4 காலிப்பணியிடங்கள் 20 உள்ளன. இந்த தேர்வுகளுக்கு ஆட்களை தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதத்திற்குள் வர உள்ளது. நூலகர்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும்.
குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவு
நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவு இன்னும் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும். என்ஜினீயர்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்வு முடிவும் வெளியிடப்பட உள்ளது.
இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
மனிதநேய பயிற்சி மையம்
முதல் இடத்தை பிடித்த ச.ஜெயபிரீத்தா கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர். எம்.இ. படித்திருக்கிறார். அவர் மேயர் சைதை துரைசாமி நடத்தும் மனித நேயம் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றிருக்கிறார். ஏற்கனவே குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். நடைபெற்ற குரூப்-1 மெயின் தேர்வை எழுதி உள்ளார். முடிவுக்காக காத்திருக்கிறார்.
அதுபோல 2-வது இடம் பெற்ற ரெங்நாதன் வெங்கட்ராமன், 4-வது இடம் பெற்ற சிவன் பாண்டியன் ஆகியோரும் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்றவர்கள்தான். ரெங்கநாதன் வெங்கட்ராமன் ஏற்கனவே நேர்முகத்தேர்வு அல்லாத குரூப்-2 தேர்வில் முதல் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல 5-வது இடம் பெற்ற தமிழரசி காஞ்சீபுரத்தை சேர்ந்தவர். பி.இ. பட்டதாரியான அவர் ஏற்கனவே குரூப்-4, நேர்முகத்தேர்வு இல்லாத குரூப்-2 ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணி பெற்றவர்.
நேற்று தேர்ச்சி பெற்று பணி ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்களில் பலர் குரூப்-1 மெயின் தேர்வை எழுதி உள்ளனர். அவர்கள் முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.