கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
முதல் 4 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணையை துணைவேந்தர்
டாக்டர் எஸ்.திலகர் வழங்கினார்.
கால்நடை மருத்துவம்
தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், விளையாட்டு பிரிவினர் ஆகியோருக்கான கலந்தாய்வும், பிளஸ்-2 வரை தொழில்கல்வி பாடம் எடுத்து படித்தவர்களுக்கான கலந்தாய்வும் நேற்று நடந்தது.
சென்னை வேப்பேரி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் நடந்த இந்த கலந்தாய்வை
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர்
தொடங்கிவைத்தார். கால்நடை மருத்துவம்
தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், விளையாட்டு பிரிவினர் ஆகியோருக்கான கலந்தாய்வும், பிளஸ்-2 வரை தொழில்கல்வி பாடம் எடுத்து படித்தவர்களுக்கான கலந்தாய்வும் நேற்று நடந்தது.
மாற்றுத்திறனாளிகளுக் கான தரவரிசை பட்டியல்படி 4 மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரியில் சேருவதற்கான ஒதுக்கீட்டு ஆணையை அவர் வழங்கினார். அவர்கள் பெயர் விவரம் வருமாறு (கட் ஆப் மதிப்பெண் அடைப்புக்குள்):- தேவராஜ் (159.75), செம்பருத்தி (136), ஜனனி (106.25), வைஷாலி (88).
இடங்கள் விவரம்
துணைவேந்தர் டாக்டர் திலகர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 இடங்களில் கால்நடை மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில் சென்னையில் 120 இடங்களும், நாமக்கல்லில் 80 இடங்களும், திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாட்டில் தலா 60 இடங்களும் உள்ளன. மொத்தம் உள்ள 320 இடங்களும் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பி.வி.எஸ்சி. மற்றும் ஏ.எச்.) படிப்புக்குரியது.
மேலும் பி.டெக். உணவு தொழில்நுட்பம் படிப்பில் 20 இடங்களும், பி.டெக். பால் தொழில்நுட்ப படிப்பில் 20 இடங்களும், பி.டெக். கோழி உற்பத்தி தொழில்நுட்ப படிப்பில் 20 இடங்களும் இருக்கின்றன. இன்று (வெள்ளிக்கிழமை) கால்நடை மருத்துவ படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கி 8-ந்தேதி முடிகிறது.
இவ்வாறு டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்தார்.
பேட்டியின்போது கால்நடை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தேர்வுக்குழு தலைவர் டாக்டர் திருநாவுக்கரசு உடன் இருந்தார்.