சேலம் மாவட்டம், ஆறகளூரில் வியாழக்கிழமை காலை கம்பி வேலியை உடைத்துக்
கொண்டு பள்ளி வளாகத்துக்குள் கார் புகுந்தது. இதில், மாணவ, மாணவியர் 4 பேர்
பலத்த காயமடைந்தனர்.
தலைவாசலை அடுத்துள்ள ஆறகளூரில் காமநாதேஸ்வரர் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக மாணவ, மாணவியர் சிலர் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது,
ஆறகளூரை அடுத்த வேப்பம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (28)
என்பவர், கோயிலில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நண்பர்களுடன்
காரில் வந்து கொண்டிருந்தார். அதிவேகமாக வந்த கார், கோயிலுக்கு அருகே
வளைவில் திரும்பும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர், கம்பி
வேலியை உடைத்துக் கொண்டு பள்ளி மைதானத்துக்குள் கார் பகுந்தது. தொடர்ந்து,
தாறுமாறாக ஓடிய கார், அங்கு விளையாடிக் கொண்டிருந்த மாணவ, மாணவியர் மீது
மோதியது. இதில், 5-ஆம் வகுப்பு மாணவியர் துர்கா(11), அருணா (10),
தேவதர்ஷினி (10), ஒன்றாம் வகுப்பு மாணவர் அர்விந்த் (6) ஆகிய 4 பேரும்
பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆத்தூர் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.தலைவாசலை அடுத்துள்ள ஆறகளூரில் காமநாதேஸ்வரர் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக மாணவ, மாணவியர் சிலர் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
விபத்து நிகழ்ந்ததும் சதீஷ்குமாரின் நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். காரை ஓட்டி வந்த சதீஷ்குமார் பொதுமக்கள் வசம் சிக்கினார். அவரை தாக்கிய பொதுமக்கள், தலைவாசல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தலைவாசல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.