மகாபலிபுரம் கடற்கரை கோவிலில், 'வை - பை' வசதி இன்று துவங்கப்படுகிறது.
'இந்தியாவிலுள்ள
முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில், 'வை - பை' வசதி
அறிமுகம் செய்யப்படும்' என, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிவித்து இருந்தது.
சென்னை மெரீனா கடற்கரை, மகாபலிபுரம் கடற்கரை கோவில் ஆகியவை, அந்தப்
பட்டியலில் இருக்கின்றன. மகாபலிபுரம் கடற்கரை கோவில், தொல்லியல் துறை
கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால், அந்தத் துறையின் அனுமதி பெற்று, 'வை -
பை' வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடற்கரை
கோவில் பகுதிக்குள் செல்லும்போது, 'வை - பை' வசதியை மொபைல் போனில்
செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம். முதல், 30 நிமிடங்களுக்கு இலவசம். அதற்கு
பின், உபயோகப்படுத்தும் நிமிடங்களுக்கு, கட்டணம் செலுத்த வேண்டும். கட்டண
விவரம் இன்று அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.