செல்பி குறித்து கூகுல் நடத்திய ஆய்வில் சில சுவாரஷ்யமான தகவல்களை தெரிவித்துள்ளது.
அதேசமயம் இளைய வயதை கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 2.4 செல்பியும், 4 முறை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கிறார்கள்.
இந்த செல்பி மோகம் இளைஞர்களை மட்டும் விட்டு வைக்கவில்லை உலகில் உள்ள அனைத்து பிரபலலங்களை இந்த செல்லி பாடாய் படுத்தி உள்ளது என்றே கூறலாம்.
இதில் எலன் டீஜெனரசின், 'ஆஸ்கார்' செல்பி, செவ்வாய் கிரகத்துடன், 'ரோவர்' விண்கலம் எடுத்த செல்பி, மாடல் அழகி, கிம் கர்தஷியானை, யானை தாக்கிய செல்பி ஆகியவை மிகவும் பிரபலமாக உள்ளன.
செல்பி எனப்படும் புகைப்படங்கள் 1800களில் இருந்தே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வார்த்தை மிகவும் பிரபலமடைந்தது சமூக வலைத்தலங்களினால் தான். முன்னதாக 2002-ல் முதன் முதலாக செல்பி எனும் சொல் ஒரு ஆஸ்திரேலிய இணையதளத்தில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.








