மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று நடத்திய சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வை நாடு முழுவதும் 4.65 லட்சம் பேர் எழுதினர். இதுகுறித்து, யு.பி.எஸ்.சி. செயலாளர் அசிம் குரானா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முதன்மை தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை
14,280-ஆக அதிகரித்துள்ளது. இன்று நடந்த தேர்வில் 4,65,882 பேர்
பங்குபெற்றுள்ளனர். மொத்தம் 9,45,908 பேர் இந்த தேர்வுக்காக விண்ணப்பித்து
இருந்தனர். அதில், 6,81,549 பேர் இ-அட்மிட் கார்டை டவுண்லோடு
செய்திருக்கிறார்கள். இவர்களில், 4,65,882 பேர் தேர்வை
எழுதியிருக்கிறார்கள். எனினும், விண்ணப்பித்தவர்களில் 49 சதவீதம் பேரே
தேர்வை எழுதியிருக்கிறார்கள்.
இவ்வாறு குரானா தெரிவித்தார்.இரண்டு தாள்களை கொண்ட இந்த தேர்வில் முதல் தாள் இன்று காலை 9.30 மணிக்கும், இரண்டாம் தாளுக்கான தேர்வு பிற்பகல் 2.30 மணிக்கும் நடைபெற்றது. நாடு முழுவதும் 71 நகரங்களில் 2,186 இடங்களில் நடைபெற்றது.