விழுப்புரம் மாவட்ட கருவூலம்
மற்றும் சார்நிலைக் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் வரும்
25ஆம் தேதிக்குள் நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்
எம்.லட்சுமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பின்
விவரம்: விழுப்புரம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்களில்
ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் அனைவரையும் நேர்காணல் செய்ய கடந்த ஏப்ரல்
முதல் ஜூலை மாதம் வரை வாய்ப்பளிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை நேர்காணலுக்கு வராதவர்கள் அல்லது வாழ்நாள்
சான்றிதழ் அளிக்காதவர்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் நேர்காணல் செய்ய
மீண்டும் ஓர் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதம்
முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
நேர்காணலுக்கு வர முடியாதவர்கள் உரிய மருத்துவ அலுவலரிடம் இருந்து வாழ்வு சான்றிதழ் அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் புதிய மருத்துவ ஓய்வூதியர் நல காப்பீட்டுத்
திட்டத்துக்கு உரிய விண்ணப்பத்தை இதுவரை கருவூலத்தில் அளிக்காதவர்கள்
நேரில் சென்று உடனடியாக விண்ணப்பிக்கவும். ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள்
தங்களுக்குரிய அடையாள அட்டையை கருவூலத்தில் வந்து பெற்றுக் கொள்ளவும்
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.