Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
அரசு உதவி பெறும் ஆசிரியர்களை பள்ளி கமிட்டி அனுமதி இல்லாமல் வேறு பள்ளிக்கு மாற்ற முடியாது: தொடக்கக் கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு:
அரசு உதவி பெறும் ஆசிரியர்களை பள்ளி கமிட்டி அனுமதி இல்லாமல் வேறு பள்ளிக்கு மாற்ற முடியாது: தொடக்கக் கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு:
விருதுநகர் மாவட்டம் முகவூரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர், மதுரை ஐகோர்ட்டுகிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–
நான், ராஜபாளையம் புனல்வெளியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான முருகன் ஆரம்ப பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வந்தேன்.
பள்ளியை நிர்வகிப்பது சம்பந்தமான பிரச்சினையில் அங்கு
பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரிகள் மூலம் நேரடியாக சம்பளம்
வழங்கப்படுகிறது.
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது, விடுமுறை
அனுமதிப்பது, வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை முன்பணமாக
எடுத்துக்கொள்ள அனுமதிப்பது போன்ற சில அதிகாரங்களை மட்டும் மாவட்ட தொடக்கக்
கல்வி அதிகாரிக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் அளித்துள்ளார். இதைதவிர,
பள்ளி கமிட்டிக்கு அளிக்கப்பட்டு உள்ள அதிகாரங்களில் கல்வி அதிகாரிகள்
தலையிட முடியாது. இந்தநிலையில், நான் பணியாற்றி வரும் பள்ளியில்மாணவர்களின்
எண்ணிக்கையை விட ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறி என்னை
மீனாட்சிபுரத்தில் உள்ள காமராஜர் தொடக்கப் பள்ளிக்கு மாற்றி 22.7.2015
அன்று விருதுநகர் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி உத்தரவிட்டார். என்னை வேறு
பள்ளிக்கு மாறுதல் செய்ய கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. நான்,
பணியாற்றி வரும் பள்ளியில் இருந்து என்னை விடுவிக்க பள்ளி கமிட்டிக்கு
மட்டுமே அதிகாரம் உள்ளது.
ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில்
நான் பணியாற்றி வரும் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள்
தான் பணியாற்றி வருகின்றனர். கூடுதல் ஆசிரியர்கள் பணியில் இல்லை. அதே
போன்று, நான் பணியாற்றி வரும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின்
எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் உள்ளனர். இதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல்
விருதுநகர் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி எந்திரத்தனமாக, என்னை வேறு
பள்ளிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். எனவே, என்னை வேறு பள்ளிக்கு மாற்றி
22.7.2015 அன்று விருதுநகர் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பிறப்பித்த
உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் கே.கே.கண்ணன், ‘அரசு உதவி பெறும் தனியார்
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை பள்ளிக்கமிட்டி அனுமதி இல்லாமல் வேறு
பள்ளிக்கு மாற்ற முடியாது‘ என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரரை
வேறு பள்ளிக்கு மாற்றி தொடக்கக் கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு
தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக
தொடக்கக்கல்வித்துறை இயக்குனர், விருதுநகர் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி
ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








