பா.ஜ.,வின், மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத், லோக்சபாவில் நேற்று பேசியதாவது:போஸ்ட் கார்டு, இன்லாண்ட் லெட்டர் ஆகியவற்றை தயாரித்து, விற்பனை செய்வதில் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஒரு போஸ்ட் கார்டு, 0.50 பைசாவுக்கு விற்கப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு கார்டுக்கும் தயாரிப்பு செலவு வகையில், அரசுக்கு, 7 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
'மை ஸ்டாம்ப்' என்ற திட்டத்தின் மூலம், அரசுக்கு இதுவரை, 4.5 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதில், நாட்டிலேயே அதிகபட்சமாக, தமிழகத்தில் இருந்து தான், 54 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. நாகாலாந்து, மிசோராம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து, ஒரு பைசா கூட வருவாய் கிடைக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.








