கடந்த வாரம் வருமானவரி குறித்த அடிப்படைத் தகவல்களையும், யாரெல்லாம்
வருமானவரி படிவத்தைத் தாக்கல் செய்யவேண்டும், அவர்களில் யார் வருமானவரி
அலுவலகத்தில் நேரில் சென்று தாக்கல் செய்யலாம், யார்
efiling செய்யவேண்டும் என்பதையும் பார்த்தோம்.
இப்போது, யார் எந்தப் படிவத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனப்பார்க்கலாம்.
படிவம் மிஜிஸி ITR 1 (Sahaj):
மாத வருமானம் (salary) அல்லது பென்சன் (pension) பெறும் தனி நபர்கள் (individuals), அதைத்தவிர வீட்டிலிருந்தோ (income from house property) அல்லது இதர வகையிலிருந்தோ (income from other sources) வருமானம் ஈட்டும் பட்சத்தில் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தப்படிவத்தைப் பயன்படுத்தலாம். எனவே, ஒருவருக்குத் தொழில் வருமானம் (income from business or profession) அல்லது மூலதன ஆதாயம் பெறுவோர் (capital gain) அதாவது சொத்தை விற்று கிடைக்கும் லாபம் பெறுவோர், இந்தப்படிவத்தைப் பயன்படுத்த முடியாது என்பது தெளிவு.
நிபந்தனைகள்:efiling செய்யவேண்டும் என்பதையும் பார்த்தோம்.

1. அவர்கள் ஒரே ஒரு வீட்டிலிருந்து மட்டுமே வருமானம் (லாபம் அல்லது நஷ்டம்) (income / loss from only one house property) பெறுபவர்களாக இருக்கவேண்டும். அதே நேரத்தில், கடந்த வருடங்களில் வீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தை (loss from earlier years) இந்த வருடத்திற்கு எடுத்து வர அல்லது ஈடு செய்ய விரும்புபவர்களும் இந்த படிவத்தைப் பயன்படுத்த முடியாது.
2. அவர்களுடைய இதர வருமானம் (லாட்டரி வருமானமோ அல்லது குதிரைப்பந்தய வருமானமோ) வருமானால் அவர் களும் இந்த படிவத்தைப் பயன்படுத்த முடியாது.
3. வெளிநாடுகளிலிருந்து வருமானம் (income from any source outside India) பெறுவோர் அல்லது வெளிநாடுகளில் சொத்து வைத்திருப்பவர் இந்த படிவத்தைப் பயன்படுத்த முடியாது.
4. விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானம் (agricultural income) ஐயாயிரம் ரூபாயை விட அதிகமாக இருப்போரும் இந்த படிவத்தைப் பயன்படுத்த முடியாது.
படிவம் ITR 2A:
இந்த வருடத்தில் புதிதாய் வந்த படிவம் இது. தனிநபர்களோ, பிரிக்கப்படாத இந்து குடும்பமோ (Hindu Undivided Family) அவர்கள் ஈட்டும் வருமானத்தில் தொழில் வருமானம் அல்லது மூலதன ஆதாயம் இல்லையெனில் இந்தப்படிவத்தைப் பயன்படுத்தலாம்.
எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வருமானம் பெறுவோரும், கடந்த ஆண்டுகளின் நஷ்டத்தை ஈடு செய்யவிரும்புவோரும், லாட்டரி அல்லது குதிரைப்பந்தய வருமானம் பெறுவோரும், விவசாய வருமானம் பெறுவோரும் (எவ்வளவாக இருந்தாலும்) இந்தப்படிவத்தைப் பயன்படுத்த இயலும்.
அதேநேரத்தில், வெளிநாடுகளிலிருந்து வருமானம் (income from any source outside India) பெறுவோர் அல்லது வெளி நாடுகளில் சொத்து வைத்திருப்பவர் இந்த படிவத்தைப் பயன்படுத்த முடியாது.
படிவம் ITR 2:
தனிநபர்களோ, பிரிக்கப்படாத இந்து குடும்பமோ அவர்கள் ஈட்டும் வருமானத்தில் தொழில் வருமானம் இல்லையெனில் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம்.
ஆகவே, ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வருமானம் பெறுவோரும், கடந்த ஆண்டுகளின் நஷ்டத்தை ஈடு செய்யவிரும்புவோரும், லாட்டரி அல்லது குதிரைப்பந்தய வருமானம் பெறுவோரும், விவசாய வருமானம் பெறுவோரும் (எவ்வளவாக இருந்தாலும்) மூலதன ஆதாயம் பெறுவோரும் இந்தப்படிவத்தைப் பயன்படுத்த இயலும்.
வெளிநாடுகளிலிருந்து வருமானம் (income from any source outside India) பெறுவோர் அல்லது வெளிநாடுகளில் சொத்து வைத்திருப்பவரும் இதைப்பயன்படுத்தலாம்.
படிவம் ITR 3:
கூட்டுநிறுவனத்தில் (partnership firm) பங்குதாரராக (partner) இருக்கும் தனிநபர்களோ, பிரிக்கப்படாத இந்து குடும்பமோ அவர்கள் அந்தக்கூட்டு நிறுவனத்திலிருந்து பெறும் வருமானத்தைத் தவிர தனியாக ஏதும் தொழில் செய்யவில்லையெனில் இந்தப்படிவத்தைப் பயன்படுத்தலாம்.
படிவம் ITR 4S (Sugam) :
வரவுசெலவு புத்தகங்களைக் கணக்கில் கொள்ளாமல் தொழில் வருமானம் ஈட்டும் குறிப்பிட்ட தனிநபர்கள், தங்கள் மொத்த வருமானத்தில் ஒரு பகுதியை உத்தேசமான வரியைக் கட்ட வருமானவரிச்சட்டம் அனுமதிக்கிறது. அவர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம்.
ஆனால், வெளிநாடுகளிலிருந்து வருமானம் (income from any source outside India) பெறுவோர் அல்லது வெளிநாடுகளில் சொத்து வைத்திருப்பவர் மற்றும் விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானம் (agricu-ltural income) ஐயாயிரம் ரூபாயை விட அதிகமாக இருப்போர் ஆகியோர் இந்த படிவத்தைப் பயன்படுத்த முடியாது.கடந்த வாரம் வருமானவரி குறித்த அடிப்படைத் தகவல்களையும், யாரெல்லாம் வருமானவரி படிவத்தைத் தாக்கல் செய்யவேண்டும், அவர்களில் யார் வருமானவரி அலுவலகத்தில் நேரில் சென்று தாக்கல் செய்யலாம், யார்
e filing செய்யவேண்டும் என்பதையும் பார்த்தோம்.
இப்போது, யார் எந்தப் படிவத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனப்பார்க்கலாம்.
படிவம் மிஜிஸி ITR 1 (Sahaj):
மாத வருமானம் (salary) அல்லது பென்சன் (pension) பெறும் தனி நபர்கள் (individuals), அதைத்தவிர வீட்டிலிருந்தோ (income from house property) அல்லது இதர வகையிலிருந்தோ (income from other sources) வருமானம் ஈட்டும் பட்சத்தில் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தப்படிவத்தைப் பயன்படுத்தலாம். எனவே, ஒருவருக்குத் தொழில் வருமானம் (income from business or profession) அல்லது மூலதன ஆதாயம் பெறுவோர் (capital gain) அதாவது சொத்தை விற்று கிடைக்கும் லாபம் பெறுவோர், இந்தப்படிவத்தைப் பயன்படுத்த முடியாது என்பது தெளிவு.
நிபந்தனைகள்:
1. அவர்கள் ஒரே ஒரு வீட்டிலிருந்து மட்டுமே வருமானம் (லாபம் அல்லது நஷ்டம்) (income / loss from only one house property) பெறுபவர்களாக இருக்கவேண்டும். அதே நேரத்தில், கடந்த வருடங்களில் வீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தை (loss from earlier years) இந்த வருடத்திற்கு எடுத்து வர அல்லது ஈடு செய்ய விரும்புபவர்களும் இந்த படிவத்தைப் பயன்படுத்த முடியாது.
2. அவர்களுடைய இதர வருமானம் (லாட்டரி வருமானமோ அல்லது குதிரைப்பந்தய வருமானமோ) வருமானால் அவர் களும் இந்த படிவத்தைப் பயன்படுத்த முடியாது.
3. வெளிநாடுகளிலிருந்து வருமானம் (income from any source outside India) பெறுவோர் அல்லது வெளிநாடுகளில் சொத்து வைத்திருப்பவர் இந்த படிவத்தைப் பயன்படுத்த முடியாது.
4. விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானம் (agricultural income) ஐயாயிரம் ரூபாயை விட அதிகமாக இருப்போரும் இந்த படிவத்தைப் பயன்படுத்த முடியாது.
படிவம் ITR 2A:
இந்த வருடத்தில் புதிதாய் வந்த படிவம் இது. தனிநபர்களோ, பிரிக்கப்படாத இந்து குடும்பமோ (Hindu Undivided Family) அவர்கள் ஈட்டும் வருமானத்தில் தொழில் வருமானம் அல்லது மூலதன ஆதாயம் இல்லையெனில் இந்தப்படிவத்தைப் பயன்படுத்தலாம்.
எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வருமானம் பெறுவோரும், கடந்த ஆண்டுகளின் நஷ்டத்தை ஈடு செய்யவிரும்புவோரும், லாட்டரி அல்லது குதிரைப்பந்தய வருமானம் பெறுவோரும், விவசாய வருமானம் பெறுவோரும் (எவ்வளவாக இருந்தாலும்) இந்தப்படிவத்தைப் பயன்படுத்த இயலும்.
அதேநேரத்தில், வெளிநாடுகளிலிருந்து வருமானம் (income from any source outside India) பெறுவோர் அல்லது வெளி நாடுகளில் சொத்து வைத்திருப்பவர் இந்த படிவத்தைப் பயன்படுத்த முடியாது.
படிவம் ITR 2:
தனிநபர்களோ, பிரிக்கப்படாத இந்து குடும்பமோ அவர்கள் ஈட்டும் வருமானத்தில் தொழில் வருமானம் இல்லையெனில் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம்.
ஆகவே, ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வருமானம் பெறுவோரும், கடந்த ஆண்டுகளின் நஷ்டத்தை ஈடு செய்யவிரும்புவோரும், லாட்டரி அல்லது குதிரைப்பந்தய வருமானம் பெறுவோரும், விவசாய வருமானம் பெறுவோரும் (எவ்வளவாக இருந்தாலும்) மூலதன ஆதாயம் பெறுவோரும் இந்தப்படிவத்தைப் பயன்படுத்த இயலும்.
வெளிநாடுகளிலிருந்து வருமானம் (income from any source outside India) பெறுவோர் அல்லது வெளிநாடுகளில் சொத்து வைத்திருப்பவரும் இதைப்பயன்படுத்தலாம்.
படிவம் ITR 3:
கூட்டுநிறுவனத்தில் (partnership firm) பங்குதாரராக (partner) இருக்கும் தனிநபர்களோ, பிரிக்கப்படாத இந்து குடும்பமோ அவர்கள் அந்தக்கூட்டு நிறுவனத்திலிருந்து பெறும் வருமானத்தைத் தவிர தனியாக ஏதும் தொழில் செய்யவில்லையெனில் இந்தப்படிவத்தைப் பயன்படுத்தலாம்.
படிவம் ITR 4S (Sugam) :
வரவுசெலவு புத்தகங்களைக் கணக்கில் கொள்ளாமல் தொழில் வருமானம் ஈட்டும் குறிப்பிட்ட தனிநபர்கள், தங்கள் மொத்த வருமானத்தில் ஒரு பகுதியை உத்தேசமான வரியைக் கட்ட வருமானவரிச்சட்டம் அனுமதிக்கிறது. அவர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம்.
ஆனால், வெளிநாடுகளிலிருந்து வருமானம் (income from any source outside India) பெறுவோர் அல்லது வெளிநாடுகளில் சொத்து வைத்திருப்பவர் மற்றும் விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானம் (agricu-ltural income) ஐயாயிரம் ரூபாயை விட அதிகமாக இருப்போர் ஆகியோர் இந்த படிவத்தைப் பயன்படுத்த முடியாது.
படிவம் ITR 4:
பொதுவாக தொழில் முனைவோர் (தனிநபரோ, பிரிக்கப்படாத கூட்டுக்குடும்பமோ) மேலே குறிப்பிட்ட எவ்வித நிபந்தனைகளும் இன்றி இந்தப்படிவத்தைப் பயன்படுத்தலாம்.
(இவை தவிர கூட்டு நிறுவனம் (partnership firm), நிறுவனம் (company) என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி படிவங்கள் உள்ளன.)
உங்களுக்கு உரிய படிவங்களை பூர்த்தி செய்வதற்கு முன்பு சிறிய சரிபார்த்தல் பட்டியலைத் (check list) தயாராக வைத்திருப்பது நல்லது.
1. படிவம் (Form) 16: இது மாத வருமானம் பெறுவோருக்கு வரிபிடித்தம் செய்த நபர் (person responsible for deducting tax) கொடுப்பது. இதில் உங்கள் வருட வருமானம், கழிவுகள் (deductions), வரிப்பிடித்தம் (TDS) எவ்வளவு போன்ற விவரங்கள் இருக்கும். இதன்படியே, உங்களுடைய சம்பள வருமானத்தை வருமானவரி படிவத்தில் நிரப்பவேண்டும்.
2. படிவம் 16A: இது உங்களுடைய இதர வருமானத்திற்காக தரப்படுவது. உதாரணமாக, நீங்கள் வங்கியில் டெபாசிட் செய்த தொகைக்கான வட்டி, அதற்கான வரிபிடித்தம் அல்லது உங்களுடைய தொழிலுக்கு வழங்கப்பட்ட தொகை, அதற்கான வரிபிடித்தம் போன்ற விவரங்கள் இருக்கும்.
3. படிவம் 26 AS: அண்மைக்காலங்களில் அறிமுகமான இது மிக முக்கிய ஒரு படிவம் ஆகும். இதை நீங்களே இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதில் ஒரு குறிப்பிட்ட வருடத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட தொகை (சம்பள வருமானம், வட்டி, தொழில் வருமானம் உட்பட அனைத்தும்) எவ்வளவு, அதற்கான வரிபிடித்தம் எவ்வளவு போன்ற எல்லா விவரங்களும் இருக்கும்.
இனி, நாம் தேர்ந்தெடுத்த படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது எனக்காணலாம்.
முதலில் E filing பற்றி பார்க்கலாம். நீங்கள் ஏற்கனவே வருமானவரி e filing இணையத்தில் பதிவு (register) செய்திருந்தால் உங்களுடைய பயன்பாட்டு எண் (user ID) இங்கே, நிரந்தரகணக்கு எண் (PAN), கடவுச்சொல் (password), பிறந்ததேதி மற்றும் capcha ஆகியவற்றைப் பயன்படுத்தி உள்ளே செல்லலாம்.
இதுவரை நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களுடைய பெயர், பிறந்த தேதி, முகவரி, தந்தை பெயர், PAN, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கொண்டு முதலில் பதிவுசெய்யவேண்டும். பதிவு செய்தவுடன், உங்களுடைய மின்னஞ்சலுக்கு வந்த activation link ஐயும், அலைபேசி எண்ணுக்கு வந்த PINஐயும் பயன்படுத்தி activate செய்யவேண்டும். பின்னர் முந்தைய பத்தியில் குறிப்பிட்ட விவரங்களைப் பயன்படுத்தி உள்ளே செல்லலாம். கடவுச்சொல்லை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
இனி, எவ்வாறு file செய்வது எனப்பார்க்கலாம்.
e filing போர்ட்டலின் உள்ளே சென்றவுடன், பதிவிறக்கப்பகுதிக்கு (download) செல்லவும். உங்களுக்கான படிவத்தையும், நீங்கள் விரும்பும் பயன்பாட்டினையும் (அதாவது excel utility அல்லது java utility) தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்யவேண்டும். பின்னர் படிவத்தைப் பூர்த்திசெய்து (off line) மீண்டும் e filing போர்ட்டலின் உள்ளே சென்று upload செய்யவேண்டும். உங்களுக்கான படிவம் ITR1 (Sahaj) அல்லது ITR4S (Sugam) எனில், நீங்கள் பதிவிறக்கம் செய்யாமலேயே அதாவது on line லேயே பூர்த்திசெய்து விடலாம்.
நீங்கள் Digital Signature Certificate வைத்திருப்பவர் எனில், இத்துடன் உங்கள் வேலை முடிந்துவிடுகிறது.
Digital Signature Certificate இல்லையெனில், கீழ்க்கண்ட மூன்று வழிகளில் ஏதாவதொரு வகையில் e verification செய்ய வேண்டும்.
1. நீங்கள் உங்கள் படிவத்தை upload செய்தவுடன் Electronic Verification
Codeஐ உருவாக்கி (Generate செய்து) அந்த Codeஐப் பூர்த்திசெய்யவேண்டும்.
2. நீங்கள் net banking மூலம் uupload செய்திருந்தால் அங்கேயே சரிபார்த்து உறுதி (e verify and confirm) செய்ய வேண்டும்.
3. ஆதார் எண்ணைக் கொடுத்திருந்தால் One Time Password மூலம் உறுதிசெய்யவேண்டும்.
உங்களிடம் Digital Signature Certificate இல்லை; அதேநேரத்தில், நீங்கள்
e verification ம் செய்யவில்லை எனில், படிவத்தை upload செய்தபின் உருவாகும் (உங்கள் மின்னஞ்சலுக்கும் வரும்) ITRV ஐ பிரிண்ட் செய்து கையெழுத்திட்டு பெங்களூருவில் உள்ள CPC-க்கு சாதாரண தபாலில் (ITRVM ல் உள்ள முகவரிக்கு) 120 நாட்களுக்குள் அனுப்பவேண்டும்.
சந்தேகமிருப்பின் E filing போர்ட்டலின் Helpல் உள்ள presentation ஐப் பார்க்கவும்.
நேரில் சென்று தாக்கல் செய்ய:
உங்களுக்கான படிவத்தை வருமானவரி அலுவலகத்தில் சென்று இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். (அதிக வரிபிடித்தம் செய்து Refund claim பண்ணுகிறவர்களோ, ஐந்து லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களோ வருமானவரிப்படிவத்தை நேரில் தரமுடியாது என்பதை மீண்டும் ஒருமுறை இங்கே நினைவில் கொள்க.)
நீங்கள் தேர்ந்தெடுத்த படிவம் எதுவாக இருந்தாலும், சில பத்திகள் (columns) எல்லாப் படிவத்திற்கும் பொதுவானவையே. உங்களுடைய பெயர், பாலினம், பிறந்த தேதி, தந்தை பெயர், வருமானவரி நிரந்தர கணக்கு எண், ஆதார் எண், முழு முகவரி, தொலைபேசி / அலைபேசி எண், மின்அஞ்சல் முகவரி (e mail id), வங்கி கணக்கு எண், வங்கியின் IF-SC code மற்றும் MICR எண் போன்ற அடிப்படைத் தகவல்களை சரியாக பூர்த்தி செய்யுங்கள்.
பூர்த்தி செய்த படிவத்தை அங்கேயே கொடுத்துவிடலாம். வருமானவரி அலுவலர் கொடுக்கும் முத்திரையிட்ட acknowledgement பேப்பரைப் பத்திரமாக (குறைந்தபட்சம் ஏழெட்டு ஆண்டுகளுக்காவது) வைத்திருக்கவும்.
சந்தேகங்களுக்கு வருமானவரி அலுவலகத்தை 044-28338383 என்ற தொலைபேசி எண்ணிலோ info@tnincometax.gov.in என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.
அலுவலக முகவரி: ஆயகர் பவன், 121, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600034. தகவல்: ந. இசக்கி மகராஜன், தூத்துக்குடி.