விண்வெளி தொழில்நுட்பத்தில்
இந்தியா வல்லரசாக மாறும் என்றார் மத்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி
அமைப்பின் முன்னாள் தலைவரும், பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானியுமான ஏ.
சிவதாணுபிள்ளை.
தஞ்சாவூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
விண்வெளியில் யுரேனியத்தை விட பல மடங்கு சக்தி வாய்ந்த மற்றும் பாதுகாப்பு நிறைந்த ஹீலியம் 3 கிடைக்கிறது.
இதைக் கண்டுபிடிக்க சந்திரயான்-2 என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பவுள்ளது.
இதை நாம் பயன்படுத்தத் தொடங்கினால் விண்வெளி தொழில்நுட்பத்தில் நம் நாடு வல்லரசாக மாறும்.
குறிப்பிட்ட இலக்கை குறித்த நேரத்தில் தாக்கும் வல்லமை கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை நமது படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
இயற்கைக்கு எதிராக நாம் எதையும் செய்ய முடியாது. நமது நாட்டுக்கு விவசாயம் தேவை.
ஆனால், வெளிநாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அதிக அளவில் செலவிடப்படுகிறது.
எனவே, எங்கு எண்ணெய் கிடைக்கிறதோ அதை எடுக்க இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஆய்வு செய்வதில் தவறு இல்லை என்றார் அவர்.