இதுதொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள், ஏற்கெனவே ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்காத மாணவர்களும் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்களும் இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள் போன்ற சிறப்பு பிரிவினராக இருப்பின் அதற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றைக் கலந்தாய்வின் போது எடுத்துவர வேண்டும்
இதில் பங்கேற்க வரும் மாணவர்கள் The Director, SCERT, Chennai-6 என்ற முகவரியில் ரூ.3,500-க்கான கேட்பு வரைவோலையை (டி.டி.) சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








