அரியவாயல் கிராமத்தில் உள்ள
ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த கட்டடத்தை
உடனடியாக அகற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மீஞ்சூரை அடுத்த அரியவாயல் பகுதியில் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள்
படித்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் ஒரு தனியார்
நிறுவனத்தால் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடம் உள்ளது. இந்தக்
கட்டடம் தற்போது சேதமடைந்து பயன்பாடின்றி உள்ளது. மேலும், எப்போது
வேண்டுமானலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. ஆகவே, இந்தக் கட்டடம்
அருகே மாணவர்கள் நடமாட விடாமல் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டிய நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.
மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பலத்த மழையால்
பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்தக்
கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின்
எதிர்பார்ப்பு.