உடல் உறுப்பு தானம் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
உடல்
உறுப்பு தான தினத்தை (ஆகஸ்ட் 6) முன்னிட்டு, சென்னை பாரதி மகளிர் கலைக்
கல்லூரியில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சென்னை அரசு ஸ்டான்லி
மருத்துவமனையின் மயக்கப் பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் ஏற்பாடு
செய்திருந்தனர். உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் மயக்கப் பிரிவு
மருத்துவர்கள் முக்கிய பங்கு வகிப்பதை முன்னிட்டு, இந்த விழிப்புணர்வு
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் 1,000 மாணவிகள்
பங்கேற்று உடல் உறுப்பு தானம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு மயக்கப் பிரிவு
மருத்துவர்கள் பதில் அளித்தனர். அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
முதல்வர் டாக்டர் ஐசக் கிறிஸ்டியன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.