Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
தீபாவளி போனஸ் 2 மடங்கு உயர்வு: உச்சவரம்பு ரூ.3,500-ல் இருந்து ரூ.7,000 ஆகிறது- மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
தீபாவளி போனஸ் 2 மடங்கு உயர்வு: உச்சவரம்பு ரூ.3,500-ல் இருந்து ரூ.7,000 ஆகிறது- மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி போனஸ் உச்சவரம்பு தொகை
ரூ.3,500-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய
அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
தொழிற்சாலை மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும்
தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்னதாக போனஸ்
வழங்கப்படுகிறது. இதற்கான போனஸ் சட்டம் கடந்த 1965-ம் ஆண்டு
அமல்படுத்தப்பட்டது.
இந்தச் சட்டத்தில் கடந்த 1993-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி,
போனஸ் உச்சவரம்பு அதிகபட்சமாக 3,500 என்று அறிவிக்கப்பட்டது. மேலும் போனஸ்
பெறுவதற்கான சம்பள உச்சவரம்பும் 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்பின், இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவில்லை. போனஸ் தொகை
ரூ.3,500 என்றே வழங்கப்பட்டது. கடந்த 12 ஆண்டு களாக போனஸ் தொகை உயர்த்தப்
படாததை கண்டித்து மத்திய தொழிற் சங்கங்கள் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி
போராட்டத்தில் ஈடுபட்டன. மத்திய அமைச்சர்கள் குழு, தொழிற்சங் கங்களுடன்
நடத்திய பேச்சுவார்த்தை யில், போனஸ் தொகையை இரட்டிப்பாக்கவும், போனஸ்
பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை உயர்த்தவும் ஒப்புக் கொண்டது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று கூடியது.
அப்போது பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை
நடத்தினர். மேலும், இந்த ஆண்டு போனஸ் தொகையை ரூ.3,500-இல் இருந்து
ரூ.7,000 ஆக உயர்த்தவும், போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை
தற்போதுள்ள ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தவும் அமைச்சரவை
ஒப்புதல் அளித்தது.
இந்த தொகை 20 ஊழியர்கள் அல்லது அதற்கு மேல் உள்ள எல்லா நிறுவனங்களுக்கும்
பொருந்தும். இந்த போனஸ் உயர்வு ஏப்ரல் 1, 2015 முதல் அமலுக்கு வருகிறது.
இதற்காக, ‘போனஸ் (திருத்த) மசோதா-2015’, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக
தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
போனஸ் சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற அனுமதிக் காக அனுப்பப்பட்டுள்ளது.
நாடாளு மன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து நேற்று நடந்த
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. எனினும் முடிவு
எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வரும் 26-ம் தேதி மீண்டும்
அமைச்சரவை கூடி முடிவெடுக்க உள்ளது. நவம்பர் மாத இறுதியில் குளிர்கால
கூட்டத் தொடர் நடைபெறும் போது, போனஸ் சட்டத் திருத்த மசோதா
நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








