பதவி உயர்வு
தமிழகத்தில் பணியாற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள்,டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி.க்களுக்கு பதவி உயர்வு வரப்போகிறது என்று கடந்த 1 மாதமாக கடும் எதிர்பார்ப்பு நிலவியது. தினந்தோறும் இது தொடர்பாக வதந்திகள் வெளி வந்த வண்ணம் இருந்தன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று மாலை 5 மணி அளவில் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் 58 பேரின் பதவி உயர்வு அறிவிப்பை அரசு வெளியிட்டது. இதையொட்டி, பணிமாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பெயர் விவரம், அவர்கள் தற்போது வகித்த பதவி மற்றும் புதிய பதவி விவரம் வருமாறு:–
1.டி.எஸ்.அன்பு –சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு –நெல்லை நகர போலீஸ் கமிஷனர் மற்றும் நெல்லை சரக டி.ஐ.ஜி.
2.பிரேம் ஆனந்த் சின்கா –மத்திய போதைப்பொருள் தடுப்பு சென்னை மண்டல இயக்குநர் மற்றும் சூப்பிரண்டு –இவர் அதே துறையில் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு
3.தீபக் எம்.தாமோர் –மும்பை சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு –அதே துறையில் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு
4. டி.செந்தில் குமார் –நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு –தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி.
5. அனிசா உசேன் –சிறப்பு காவல்படை கமாண்டன்ட் டெல்லி –விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.
6. நஜ்முல் ஹோடா –சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் –சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர்.
7. மகேந்திர குமார் ரத்தோடு –ஆந்திராவில் போலீஸ் சூப்பிரண்டு –ஆந்திராவில் டி.ஐ.ஜி.
8. எஸ்.மனோகரன் –சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் –சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர்.
9.வி.வனிதா –கடலோர காவல் குழும சூப்பிரண்டு –கடலோர காவல் குழும டி.ஐ.ஜி.
10. என்.அறிவுச் செல்வம் –திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. –சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜி.
டி.ஐ.ஜிக்கள் பதவி உயர்வு
11.ஆயுஸ் மணி திவாரி –கோவை சரக டி.ஐ.ஜி. –சென்னை ஆயுதப்படை ஐ.ஜி.
12. மகேஸ்வர் தயாள் –மத்திய அரசு பணியில் டி.ஐ.ஜி. –மாநில பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.
13. சுமித் சரண் –விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. –சேலம் நகர போலீஸ் கமிஷனர்
14. ஏ.அமல்ராஜ் –சேலம் போலீஸ் கமிஷனர் –கோவை போலீஸ் கமிஷனர்
15. அபின் தினேஷ் மோடக் –மும்பை என்.ஐ.ஏ. டி.ஐ.ஜி. –அதே துறையில் ஐ.ஜி.
16. சஞ்சய் குமார் –தஞ்சை சரக டி.ஐ.ஜி. –மாநில குற்ற ஆவண காப்பக ஐ.ஜி.
17. கே.பெரியய்யா –சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜி. –ஊர்க்காவல் படை ஐ.ஜி.
18. ஏ.ஜி.மவுரியா –சிறைத்துறை டி.ஐ.ஜி. –அதே துறையில் ஐ.ஜி.
19.ஏ.பாரி –தலைமையக டி.ஐ.ஜி. –தலைமையக ஐ.ஜி.
20. என்.கே.செந்தாமரைக்கண்ணன் –திருச்சி சரக டி.ஐ.ஜி. –சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.
21. கே.என்.சத்தியமூர்த்தி –காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. –மத்திய மண்டல ஐ.ஜி.
22. எம்.ராமசுப்பிரமணி –மத்திய மண்டல ஐ.ஜி. –ரெயில்வே ஐ.ஜி.
24. சி.ஸ்ரீதர் –சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் –சென்னை தெற்கு கூடுதல் கமிஷனர்.
25. எஸ்.முருகன் –நெல்லை சரக டி.ஐ.ஜி. –தெற்கு மண்டல ஐ.ஜி.
26. வி.வரதராஜு –சென்னை உளவு பிரிவு இணை கமிஷனர் –அதே துறையில் கூடுதல் கமிஷனர்.
27.எம்.சி.சாரங்கன் –சென்னை தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி. –அதே துறையில் ஐ.ஜி.
28. ஏ.ஜி.பொன் மாணிக்க வேல் –சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. –அதே துறையில் ஐ.ஜி.
ஐ.ஜி.க்கள் பதவி உயர்வு
29. சங்கர் ஜிவால் –ஈரோடு சத்தியமங்கலம் அதிரடிப்படை ஐ.ஜி. –அதே துறையில் கூடுதல் டி.ஜி.பி.
30. ஏ.கே.விஸ்வநாதன் –கோவை போலீஸ் கமிஷனர் –சென்னை மாநகர போக்குவரத்து கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரி.
31. ஆபாஷ் குமார் –சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் –போலீஸ் அகாடமி கூடுதல் டி.ஜி.பி.
32. டி.வி.ரவிச்சந்திரன் –மத்திய உளவுப்பிரிவு(ஐ.பி.) இணை இயக்குனர் –அதே துறையில் கூடுதல் டி.ஜி.பி.
33. சீமா அகர்வால் –ரெயில்வே ஐ.ஜி. –மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி.
34. அபய்குமார் சிங் –தென் மண்டல ஐ.ஜி. – மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஐ.ஜி.
35. ஆசிஷ் பெங்ரா –மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி. –சென்னை அமலாக்க பிரிவு கூடுதல் டி.ஜி.பி.
சூப்பிரண்டுகள் மாற்றம்
36. பி.அரவிந்தன் –தென்காசி இணை சூப்பிரண்டு –விருதுநகர் மாவட்ட சூப்பிரண்டு
37. எஸ்.மகேஷ்வரன் –விருதுநகர் மாவட்ட சூப்பிரண்டு –கோவை தலைமையக துணை கமிஷனர்.
38. சந்தோஷ் கடிமணி –மயிலாடுதுறை இணை சூப்பிரண்டு –நெல்லை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்.
39. சுரேஷ்குமார் –நெல்லை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் –சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர்.
40. முரளி ரம்பா –கோவில்பட்டி இணை சூப்பிரண்டு –நீலகிரி மாவட்ட சூப்பிரண்டு.
41. பண்டி கங்காதர் –குளச்சல் இணை சூப்பிரண்டு –மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்.
42. சசி மோகன் –திருமங்கலம் இணை சூப்பிரண்டு –திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்.
43. அமித் குமார் சிங் –திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் –சென்னை சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு
44.நிஷா பார்த்திபன் –கோட்டைக்குப்பம் இணை சூப்பிரண்டு –கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்.
45. ரம்யா பாரதி –கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் –கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.
46. டாக்டர் எம்.சுதாகர் –கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு –சென்னை கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு.
47. வண்டிதா பாண்டே –சிவகங்கை இணை சூப்பிரண்டு –கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.
48. ஜோஷி நிர்மல் குமார் –கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு –சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர்.
49. கல்யாண் –தர்மபுரி இணை சூப்பிரண்டு –சென்னை பரங்கிமலை துணை கமிஷனர்(பரங்கிமலை துணை கமிஷனராக இருக்கும் அவினாஷ் குமார் டி.ஜி.பி. அலுவலக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.)
50. திஷா மிட்டல் –சென்னை ஆவடி சிறப்பு காவல்படை கமாண்டன்ட் –திருப்பூர் நகர துணை கமிஷனர்.
51. ஆர்.திருநாவுக்கரசு –திருப்பூர் நகர துணை கமிஷனர் –கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.
52. பி.கண்ணம்மாள் –கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு –சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர்.
53. எஸ்.லட்சுமி –சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் –சென்னை தலைமையக துணை கமிஷனர்.
54. சந்தோஷ்குமார் – சென்னை தலைமையக துணை கமிஷனர் –சென்னை கமாண்டோ படை சூப்பிரண்டு.
55. அபிஷேக் தீட்சித் –கமாண்டோ படை சூப்பிரண்டு –சிறப்பு காவல்படை கமாண்டன்ட் டெல்லி.
56. மயில்வாகனன் –ராமநாதபுரம் சூப்பிரண்டு –தஞ்சாவூர் சூப்பிரண்டு
57. தர்மராஜன் –தஞ்சாவூர் சூப்பிரண்டு –கன்னியாகுமரி சூப்பிரண்டு
58. மணிவண்ணன் –கன்னியாகுமரி சூப்பிரண்டு –ராமநாதபுரம் சூப்பிரண்டு.








